பக்கம் எண் :

சீறாப்புராணம்

1710


இரண்டாம் பாகம்
 

4705. அருள்பெற சலாமுங் கூறி யன்னைதன் சலாமுஞ் சொல்லித்

     திருமிகு புயத்தீர் யாங்கள் கொடுத்தது சிறிய தேனும்

     பெரியவுள் ளன்பாற் கொள்ள வேண்டுமென் றுரைத்துப் பின்னர்

     அருமையி னொடுங்கி யஞ்சி யதபுட னின்றா ரன்றே.

19

     (இ-ள்) அருள் பெரும் வண்ணஞ் சாலமுஞ் சொல்லித் தங்கள் தாயாராகிய உம்முசுலைமு றலியல்லாகு அன்ஹா அவர்களது சாலமுஞ் சொல்லி அழகு மிகுந்த தோள்களையுடைய நபிகட் பெருமானே! நாங்கள் தந்தது சிறிய பொருளானாலும் அதை நீங்கள் பெரிய உள்ளன்பினாற் கொள்ள வேண்டுமென்று சொல்லி அப்பால் அருமையோடு மொடுங்கிப் பயந்து மரியாதையோடும் நின்றார்கள்.

 

4706. ததியுடன் கனியு நெய்யுஞ் சார்ந்தபாத் திரத்தைக் கண்டு

     மதிவலோ ரனசைப் பார்த்து மகிழ்ந்தசு காபி மாரைக்

     கதுமென வழையென் றோதக் கடிநகர் முழுதுந் தேடிப்

     பொதுமனை வீதி யெங்கும் புகுந்துசென் றழைத்து வந்தார்.

20

     (இ-ள்) அவ்வாறு நிற்க, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தயிரோடு ஈத்தம்பழமும் நெய்யும் பொருந்திய அந்தப் பாத்திரத்தைப் பார்த்து அறிவினால் வல்லவரான அந்த அனசு றலியல்லாகு அன்கு அவர்களை நோக்கிச் சந்தோஷித்து நவா விரைவாக அசுஹாபிமார்களைக் கூப்பிடுமென்று சொல்ல, அவர்கள் காவலைக் கொண்ட அந்தத் திருமதீனமா நகரம் முழுதும் போய் விசாரித்துப் பொதுமனைகளையுடைய வீதிகளெல்லா வற்றிலும் நுழைந்து கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

 

4707. எய்தினர் செறிந்து முன்றி லிடத்தினிற் குழூஉக்கொண் டீண்ட

     மெய்முகம் மதுவும் கண்டு விருப்புற வனசைக் கூவி

     நெய்யளை பலவொன் றாக நிறைந்தபாத் திரத்தைத் தூய

     சைலநேர் புயத்தா யார்க்குந் தறுகிடா தளிப்பா யென்றார்.

21

     (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த அசுஹாபிமார்கள் ஒருவரோடொருவர் நெருங்கிக் கூட்டமாய் முற்றத்தினிடத்திற் கூட, அதைச் சத்தியத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பார்த்து அன்பானது பொருந்தும் வண்ணம் அந்த அனசு றலியல்லாகு அன்கு அவர்களைக் கூப்பிட்டு நெய்யையும் தயிரையும் ஈத்தம்பழத்தையு