பக்கம் எண் :

சீறாப்புராணம்

1711


இரண்டாம் பாகம்
 

மொன்றாக நிறைத்த பாத்திரத்தைப் பரிசுத்தத்தைக் கொண்ட மலையையொத்த தோள்களையுடைய அனசே! நீவிர் யாவருக்குந் தவறாமற் கொடுமென்று சொன்னார்கள்.

 

4708. சொற்படி யவரும் வைத்தார் சுருதிமா நபிமு னின்ற

     பற்பல பேரைப் பார்த்துப் பதின்மரோர் குழுவாய்க் கூடி

     நற்கனி யருந்து மென்றார் நயந்தவ ருரைதப் பாமற்

     பொற்புறச் செறிந்தி ருந்து புசித்துளங் களித்தெ ழுந்தார்.

22

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அச்சொல்லின் பிரகாரம் அந்த அனசு றலியல்லாகு அன்கு அவர்களும் புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தையுடைய பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது முன்னர் நின்ற அந்த அசுஹாபிமார்கள் பற்பலரையும் வைத்து அவர்களைப் பார்த்துப் பத்துப்பேர்கள் ஒவ்வொரு கூட்டமாகச் சேர்ந்து நல்ல இவ்வீத்தங்கனியை யுண்ணுங்களென்று சொன்னார்கள். அவர்களும் விரும்பி அவ்வார்த்தையை விட்டுப் பிசகாமல் அழகானது பொருந்தும் வண்ணங் கூடி யுட்கார்ந்து அக்கனியை யருந்தி மனமானது மகிழ்ச்சியடையப் பெற்று எழும்பினார்கள்.

 

4709. முறைமுறை பதின்ம ராக மொய்த்திருந் தருந்தும் போதுங்

     குறைவற வளர்ந்த தல்லாற் குறைந்தில கனிக ளொன்றுந்

     துறைதவ றாம லுண்டோர் தொகைதனை விரித்துக் கூறிற்

     றிறனுற வருமுந் நூற்றின் மேலுஞ்சில் வான மென்பார்.

23

     (இ-ள்) அவ்வாறு வரிசை வரிசையாக அந்த அசுஹாபிமார்கள் பப்பத்துப் பெயர்களாய் ஒருவரோடொருவர் நெருங்கி யிருந்து உண்ட காலத்திலும் அக்கனிகள் குறைவின்றி வளர்ந்தனவே யல்லாமல் ஒன்றேனுங் குறைந்திலது அவற்றை ஒழுங்கு பிசகாமல் அருந்தின அசுஹாபிமார்களது மொத்தத்தை வலிமையுறும்படி விரித்துச் சொன்னால் முந்நூற்றிற்கு மேல் சொச்சமும் வருமென்று சொல்லுவார்கள்.

 

4710. அனைவரு மருந்தி னார்வே றருந்தில ரில்லை யென்ன

     மனதறிந் தனசைக் கூவி முகம்மது வரிவண் டார்க்கும்

     புனைமலர் மகரந் தேனும் பொருவரா மென்மை நொய்ய

     கனியுறு கலத்தை யென்முன் கடிதினிற் கொணர்தி யென்றார்.

24

     (இ-ள்) நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா