பக்கம் எண் :

சீறாப்புராணம்

1712


இரண்டாம் பாகம்
 

முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு யாவரு முண்டார்கள். வேறே யுண்ணாதவர்கள் ஒருவருமில்லரென்று இதயத்தின் கண் தெரிந்து அந்த அனசு றலியல்லாகு அன்கு அவர்களைக் கூப்பிட்டு இரேகைகளையுடைய வண்டுகள் ஒலிக்கா நிற்கும் புதிய புஷ்பங்களினது மகரந்தமும் மதுவு மொப்பாகாத மிகவும் மிருதுவான பழங்கள் பொருந்திய அப்பாத்திரத்தை எனது முன்னர் விரைவாய்க் கொண்டு வாருமென்று சொன்னார்கள்.

 

4711. பாத்திரந் தன்னை வந்து பார்த்துநின் றனசு முன்ன

     மாத்திர மல்ல மேன்மேல் வளர்ந்தன விதனை தீனர்

     கோத்திர முழுது மாந்தக் கொடுப்பினுங் குறையா தென்று

     தோத்திரஞ் செய்து வள்ள றுணையடிக் கருகில் வைத்தார்.

25

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அந்த அனசு றலியல்லாகு அன்கு அவர்கள் அந்தப் பாத்திரத்தை வந்து நின்று பார்த்து இது ஆதியிலிருந்த அளவல்ல, மேலுமேலு மதிகரித்தன. இதைத் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடையவர்களது கோத்திர மனைத்து மருந்தக் கொடுத்தாலுங் குறையாதென்று துதித்து வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது இரு பாதங்களுக்கும் பக்கத்தில் வைத்தார்கள்.

 

4712. கனிபுசித் துள்ள மெத்தக் களித்தசு காபி மார்க

     டனியவன் றூதைப் போற்றித் தாஞ்செலச் சிறிது பேர்கள்

     வனிதையின் மனைதன் முன்றில் வாயில்விட் டகலா நிற்ப

     வனையதோர் செயின பென்போ ரகநிறை நிறைபூண் டுற்றார்.

26

     (இ-ள்) அன்றியும், அசுஹாபிமார்கள் அவ் வீத்தம்பழத்தை யருந்தி மனமானது மிகவுஞ் சந்தோஷமடையப் பெற்று ஏகனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் துதித்துப் போக, சில பேர்கள் மங்கையரான ஒப்பற்ற அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹா அவர்களது வீட்டு முற்றத்தில் வாயிலை விட்டு நீங்காமல் நிற்க, அதைப் பார்த்து அவர்கள் தங்களிதயத்தினிடத்து மலிந்த நிறையை யணிந்திருந்தார்கள்.