இரண்டாம்
பாகம்
4713. அப்படி
யவரு நாணுற் றகத்துளே யிருப்ப மேலோன்
செப்பிய வாயத் தொன்று
சிபுரியீல் கொணர்ந் திறங்கி
யொப்பிலான் றூதர் முன்ன
ருரைத்தவர் விண்ணிற் சேர்ந்தார்
தப்பிலாக் குணத்தின்
றோழர் தங்களைத் தயவாய்ப் பார்த்தே.
27
(இ-ள்)
அந்தப் பிரகாரம் அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹா
அவர்களும் வெட்கமுற்று வீட்டினுள்ளிருக்க, யாவருக்கு
மேலானவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவானவன் கூறிய
ஓராயத்தாகிய வேதவசனத்தை ஜிபுரீ லலைகிஸ்ஸலாமவர்கள்
கொண்டு இப்பூமியின் கண்ணிறங்கி ஒப்பற்றவனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு
றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது முன்னர்ச் சொல்லி
அவர்கள் வானலோகத்தின் கண் போய்ச்
சேர்ந்தார்கள். அப்பால் அந்நபிகட் பெருமானவர்கள்
குற்றமற்ற குணத்தையுடைய தோழர்களான அசுஹாபிமார்களைக்
கருணையோடும் நோக்கி.
4714. கோதிலா
தொசீவ னந்தின் றுவந்தவர் கூண்டி ராது
போதுக செயின பென்னும்
பூங்கொடி மனது நாணி
யேதமுற் றிருந்த தாலே
யிருநிலக் கிழமை பூண்ட
மாதர்க ளெவர்க்கு நாண
மணியணிப் பூணா மென்றார்.
28
(இ-ள்)
குற்றமின்றி யுணவையருந்தி மகிழ்ச்சி யடைந்த நீங்கள்
இங்கே கூடியிராமற் செல்லுங்கள். செயினபு றலியல்லாகு
அன்ஹாவென்று சொல்லும் புஷ்பத்தைக் கொண்ட கொடி
போல்பவர்கள் தங்கள் உள்ளமானது வெட்கிக்
களங்கமடைந்திருந்ததனாற் பெரிய இப்பூமியினது உரிமையை
யணிந்த பெண்களனைவர்களுக்கும் வெட்கமானது
இரத்தினத்தையுடைய அழகிய ஆபரணமாகுமென்று
சொன்னார்கள்.
4715. வந்தஆ
யத்தின் செய்தி வகையிவை யென்ன வள்ளல்
சிந்தைகூர்ந்
துரைப்பக் கேட்டுச் சிறந்தசீர் சகுபி மார்கள்
புந்தியிற்
பெரியோன் றன்னைப் போற்றிப்பின் னபியை
வாழ்த்தித்
தந்தமக் குரிய
வில்லிற் புக்கினர் தகமை சார.
29
(இ-ள்)
வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
|