பக்கம் எண் :

சீறாப்புராணம்

1716


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு புகுந்த அவ் வொட்டகமானது அங்கு நின்ற மாமரங்களை யொடித்துக் காய்ந்த மதுவைக் கொண்ட குலையையுடைய வாழை மரங்களைத் தள்ளி, வண்டுகள் சத்திக்கத் தேனானது பரிமளியா நிற்கும் புஷ்பங்களையுடைய அசோகமரங்களை முட்டிச் சேமரங்களை யாட்டிக் காய்த்து நெருங்கிய கமுகமரங்களை எற்றிக் குற்றமறச் செறிந்த அந்தச் சோலையானது தூளாகும் வண்ணந் திரிந்தது.

 

4719. செறிவனங் காவ லாளர் செறுக்குமொட் டகையை யாமே

     குறுகுற வடுத்துப் பற்றிக் கொள்வமென் றுருத்துச் செல்ல

     வெறிதரு மதத்தாற் பேழ்வாய் மிகத்திறந் துருத்துப் பொங்கிக்

     கறிதர வருதல் கண்டு கலக்கமுற் றியக்க மற்றே.

4

     (இ-ள்) அவ்வாறு திரிய, நெருங்கிய அச்சோலையினது காவற்காரர்கள் நாம் கோபித்த இவ்வொட்டகத்தை அணுகும் வண்ணஞ் சமீபித்துப் பிடித்துக் கொள்வோமென்று சினந்து போக, மஸ்தைக் கொடுத்த மதத்தினால் அவ்வொட்டகமானது பெரிய தனது வாயை அதிகமாகத் திறந்து கோபித்துக் கிளர்ந்து கடிக்கும்படி வருவதைப் பார்த்து அவர்கள் கலக்கமடைந்து அசைவின்றி.

 

4720. புடைவரப் பயந்து நொந்து பொருமலுற் றயர்ந்து வாடி

     மிடைபடுங் கருத்தி னோடு மிகுமரக் காவை யெல்லா

     முடைபட முறித்த சோகை யுடற்றுதற் குரிய ரியாரென்

     றிடருழந் துருகி யஞ்சி யென்செய்வோ மென்ன நின்றார்.

5

     (இ-ள்) அதன் பக்கத்திற் போவதற்கு மஞ்சி வருந்திப் பொருமலடைந்து சோர்ந்து மெலிந்து துன்பமுற்ற சிந்தனையோடும் மிகுத்த மரங்களையுடைய இந்தச் சோலை முழுவதையுந் தகரும் வண்ண மொடித்த இவ்வொட்டகத்தைச் சிதற வடிப்பதற் குரியவர் யாவர்? என்று துன்பத்தினால் வருந்தி மனங்கரைந்து பயந்து நாம் இதற்கு யாது செய்வோம்? செய்யுமுபாய மொன்று மில்லையே யென்று சொல்லி நின்றார்கள்.

 

4721. வஞ்சரை மதியா வென்றி முகம்மது நபியைப் போற்றிச்

     செஞ்சரண் புகுவோ மன்னோர் தீர்ப்பரச் சோகி னாற்றற்

     றுஞ்சலா மஞ்ச லென்னத் துவன்றிமஞ் சுறங்குஞ் சோலை

     யெஞ்சலி லாத காவற் கிடருறா தென்ன வுன்னி.

6

     (இ-ள்) அவ்வாறு நின்ற அவர்கள் கொடியோர்களான சத்துராதிகளை மதியாத வெற்றியை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல்