பக்கம் எண் :

சீறாப்புராணம்

1717


இரண்டாம் பாகம்
 

சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் புகழ்ந்து அவர்களது செந்நிறத்தைக் கொண்ட திருவடிகளிற் போய்ச் சேருவோம். அவர்கள் நீங்கள் வாட்டமாகிய பயத்தைக் கொள்ளாதீர்க ளென்று சொல்லி அவ்வொட்டகத்தினது வல்லமையை யில்லாமற் செய்வார்கள். மேகங்களானவை துளி விட்டு நித்திரை செய்யா நிற்கும் சோலையினது குறையாத காவற்பாட்டிற்கும் வருத்தம் நேரிடாதென்று நினைத்து.

 

4722. ஓடினர் சலாஞ்ச லாமென் றுரைத்தனர் பலரு மொன்றாய்க்

     கூடினர் நபியே யேத்துங் கொற்றவா யாங்க ணாளுந்

     தேடிய பொருளே யென்னச் சென்னிமே லிரண்டு தாளுஞ்

     சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்தெ ழுந்தே.

7

     (இ-ள்) ஓடினார்கள் சலாம்! சலாமென்று சொன்னார்கள். பலருமொன்றாகக் கூடினார்கள். நபிகட் பெருமானே! யாங்கள் துதிக்கா நிற்கும் வெற்றியையுடைய அரசரே! பிரதி தினமும் சம்பாதித்த திரவியமே! என்று சொல்லித் தங்கள் தலைகளின் மீது அவர்களது இருபாதங்களையு மணிந்து வணங்கினார்கள். அப்பால் சந்தோஷத்தோடு மெழும்பி நடந்த சமாச்சாரத்தைச் சொன்னார்கள்.

 

4723. நடந்தனர் பதந்தோ யாம னண்ணினர் குடையாய் மேகம்

     படர்ந்தன வேத மெங்கும் பரந்தன நான வாசந்

     தொடர்ந்தனர் சகுபி மார்க டுதித்தன ரமர ரஞ்சிக்

     கிடந்தனர் குபிரர் சோலை கிட்டின ரிறைவன் றூதர்.

8

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, யாவருக்கும் இறைவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பூமியின் மீது பாதங்களானவை தோயாமல் நடந்து சென்றார்கள். மேகத்தைக் கவியாக நண்ணப் பெற்றார்கள். புறுக்கானுல் அலீமென்னும் வேத ஒலியானது எவ்விடத்தும் பரவிற்று. கஸ்தூரி வாசனையானது எங்கும் படர்ந்தது. அசுஹாபிமார்கள் கூடப் பின்பற்றிச் சென்றார்கள். தேவர்களாகிய மலாயிக்கத்துமார்கள் புகழ்ந்தார்கள். காபிர்களான சத்துராதிகள் பயந்து கிடந்தார்கள். சோலையினிடத்துப் போய்ச் சேர்ந்தார்கள்.

 

4724. ஆய்சிறைத் தூவிப் புட்க ளனைத்துமொன் றாகக் கூடி

      வாய்திறந் தரற்று மோதை முகம்மது நபியே யெம்மைத்

      தாயென வளர்த்த சோலை தனக்குறு மிடரைத் தீர்க்க

      வேயருள் செய்வீ ரென்ன விளம்புவ போலு மன்றே.

9