இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவ்வா றெதிர்ந்துவந்த அந்த
வொட்டகமானது அங்கு வந்தவர்களான நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது
மஹ்மூது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களது முகமாகிய தாமரைப் புஷ்பத்தைக் கண்டு உருகா
நின்ற சிந்தனையானது உருகிக் கண்ணீர் உண்டாகிட அழுது
நீட்சியுற்ற தனது கழுத்தை யொடுங்கச் செய்து
முன்னங்காலை முடக்கி விந்தையாக வாலை யாட்டி அவர்களது
திருவடிகளின் மீது சுஜூதிட்டது.
4731. கருத்துற
வயர்ந்து நொந்து கவலையுற் றுடம்பு வாடி
வருத்தமு முயிர்ப்பு
மெய்தி வணங்குமத் திரியை நோக்கித்
திருத்தகு மிறசூ லுல்லா
செறிந்துனைப் பிடித்துக் கட்டப்
பொருத்தமாய் வந்த
பேரைப் பொருததென் னுரைநீ யென்றார்.
16
(இ-ள்)
அவ்வாறு சிந்தனையானது சேரும் வண்ணஞ் சோர்ந்து வருந்தி
வியசனமடைந்து சரீரமெலிந்து துன்பத்தையும்
பெருமூச்சையும் பொருந்திப் பணிந்த அந்த ஒட்டகத்தை
அழகு பொருந்திய அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலான
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்கள் பார்த்து உன்னை நெருங்கிப் பிடித்துக்
கட்டுவதற்குப் பொருத்தமாக வந்த ஜனங்களை நீ பொருதிய
காரணம் யாது? அதைச் சொல்லென்று கேட்டார்கள்.
4732. இடருறு
மனத்த தாக வெழுந்தவொட் டகைமெய்ப் பாசத்
துடரறுத் துலக மெல்லாந்
துலங்கிய தீனர் வேதம்
படர்கொழு கொம்பாய்த்
தன்மம் பழுத்தநற் றருவா யன்புக்
கடலெனக் கருணை செய்யும்
கபீபிற சூலைப் பார்த்தே.
17
(இ-ள்)
அவ்வாறு கேட்க, துன்பத்தைப் பொருந்திய இதயத்தை
யுடையதாக எழும்பிய அவ்வொட்டகமானது சரீரப் பாசத்தினது
தொடர்பை யறுத்து வுலகமுழுவதும் விளங்கிய தீனுல் இஸ்லா
மென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய முஸ்லிம்களது
புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது படருகின்ற
கொழுங்கொம்பாய்ப் புண்ணியமானது கனியப் பெற்ற நல்ல
விருட்சமாய் அன்பாகிய சமுத்திரத்தைப் போலுங் கிருபை
செய்யா நிற்கும் ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய
றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல்
|