இரண்டாம்
பாகம்
(இ-ள்) யான் நெருங்கி நின்று முன்னாக ஓடி
வரப்பட்டவர்கள் அனைவரோடும் திண்ணிய போர் செய்து
திரிந்தேன். அப்படித் திரிந்த அனைத்தும் உறுதியைக்
கொண்ட இவ்வுலகத்தினிடத்துக் கலகமுண்டானால்
நியாயமுண்டென்று சொல்லும் வார்த்தையை இதயத்தின் கண்
கருதி யென்று சொல்லிற்று.
4737. கேட்டவ
ரன்பு கூர்ந்து கிருபைசெய் ததனை யாள
வேட்டவர் தம்மைக் கூவி
மெலிந்தவொட் டகைதன் மெய்யைப்
போட்டுயிர் போகு
மட்டும் புனலுட னிரையு நல்கி
யீட்டிய சுமையு நொய்தாப்
பொருத்துவ தியற்கை யென்றே.
22
(இ-ள்)
அவ்வாறு சொல்ல, அதை அவர்கள் கேள்வியுற்றுக் கருணை
அதிகரித்து அருள் புரிந்து அவ்வொட்டகத்தை யாள
விரும்பி அவ்வெஜமானைக் கூப்பிட்டு வாடிய
இவ்வொட்டகமானது தனது சரீரத்தை இப் பூமியின்மீது
போட்டு விட்டுப் பிராணனானது செல்லுகின்றவரைத்
தண்ணீரோடு உணவுங் கொடுத்துக் கூடிய பாரமும்
மெல்லியதாகச் சேர்ப்பது இயல்பாகுமென்று சொல்லி.
4738. பரவுமத்
திரியை யன்னோர் பாற்செலப் புகுத்தி நின்ற
புரவலர் தம்மை
நோக்கிப் புள்ளின முரலுந் தூய
மரவமா லிகையு நான வாசமும்
விரவி மாறா
விரைகமழ் புயத்தீ ருந்த
மேன்மையார் வகுக்க வல்லார்.
23
(இ-ள்)
தங்களைப் பணிந்த அவ் வொட்டகத்தை அதன் எஜமானாகிய
அவரிடத்துச் செல்லும் வண்ணஞ் சேர்த்து நின்ற அரசரான
நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களைப் பார்த்து வண்டுக் கூட்டங்கள் சத்திக்கா
நிற்கும் பரிசுத்தத்தைக் கொண்டத குங்குமப்
புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையுங் கஸ்தூரி
வாசனையுங் கலந்து நீங்காத சுகந்தத்தைப்
பரிமளிக்கின்ற புயத்தையுடையவர்களே! உங்களது சிறப்பை
வகுத்துச் சொல்லும் வல்லவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.
4739. அறிவிலா
நெடுங்காழுத்தற் கறிவளித் ததனைக் காத்தீர்
நெறியுளீ ரென்னப்
போற்றி நிகழ்த்தினர் சகுபி மார்கண்
மறிதிரை யுடுத்த பாரில்
வளம்பெறப் பரந்த வேதங்
குறிகொளாச் சின்கண்
மற்றக் கொஞ்சமா னிடரு மல்லால்.
24
|