பக்கம் எண் :

சீறாப்புராணம்

1723


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) ஞானமற்ற நெடிய கழுத்தையுடைய ஒட்டகத்திற்கு ஞானத்தைக் கொடுத்து அதைக் காப்பாற்றினீர்கள். ஆதலால் நீங்களே நீதியையுடையவர்களென்று அசுஹாபிமார்கள் புகழ்ந்து சொன்னார்கள். அதற்கு மறிகின்ற அலைகளையுடைய சமுத்திரத்தைத் தனக்கு ஆடையாக உடுத்த இந்தப் பூமியின்மீது வளமையானது பொருந்தும் வண்ணம் பரவிய புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது ஒழுங்கை ஏற்றுக் கொள்ளாத ஜின்களும் மற்றக் காபிர்களாகிய கொஞ்ச மனிதர்களுமே யல்லாமல். 

 

4740. கல்லுடன் மரமும் பூடுங் கருதிய விலங்கும் புள்ளுஞ்

     சொல்லிய வெவையு முண்மைத் தூதனென் றறியு மென்னை

     மல்லுறழ் புயத்தீ ரென்ன மகிழ்ந்தவர்க் குரைத்து வள்ளல்

     செல்லினந் தவழு மாடத் திருநகர் புகுந்தா ரன்றே.

25

     (இ-ள்) மல்லினா லுறழப்பட்ட தோள்களையுடைய அசுஹாபிமார்களே! என்னை மலைகளோடு விருட்சங்களும் பூண்டுகளுங் கருதிய மிருகங்களும் பறவைகளும் கூறா நிற்கும் மற்ற யாவுஞ் சத்தியத்தையுடைய றசூலென்று உணருமென்று அவர்களுக்குச் சொல்லி வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சந்தோஷித்து மேகக் கூட்டங்கள் தவழா நிற்கும் மாளிகைகளையுடைய தெய்வீகந் தங்கிய மதீனமாநகரத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.