|
இரண்டாம்
பாகம்
(இ-ள்)
செவ்வையாகச் சொல்ல, அதைத் தெய்வீகந் தங்கிய நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
கேள்வியுற்றுக் கசிந்து இப்பூமியினிடத்துள்ள
துன்பங்களை அகற்ற வேண்டி இதயத்தின் கண் கருணையானது
அதிகரித்துப் பொருந்துதற் கருமையான புறுக்கானுல்
அலீமென்னும் வேதப் பொருளும், அனைவரும் தங்கள்
அகத்தின் கண் இருத்தா நிற்கும் அரிய ஒளியுமான அல்லா
ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவை நினைத்து இரண்டு கைகளையும்
மார்புக்கு நேராக வுயர்த்தித் துஆக்கேட்டு.
4750. இறைவனே மறையின் வாழ்வே யெங்கணும்
பரந்து நின்ற
குறைவிலாப் பொருளே
சோதி குலவிய வொளிவே நீதி
முறைகுறை வறநின் றோனே
முதல்வனே யழிவில் லாம
னிறைசெழுஞ் சுடரே யென்று
நிகழ்த்திடக் கிருபை செய்தான்.
10
(இ-ள்)
கடவுளே! வேதங்களின் வாழ்வே! எவ்விடத்தும் பரவி நின்ற
குறைவற்ற பொருளே! பிரகாசமானது குலவப் பெற்ற ஒளியே!
நியாயத்தினது ஒழுங்கானது குறைவறும் வண்ணம் நின்றவனே!
யாவருக்கும் ஆதியானவனே! ஒரு காலத்துங் கெடாமல் நிறைந்த
செழிய சுடராகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவே! என்று
துதிக்க, அவன் கருணை செய்தான்.
எழுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
4751. அகமிசை யிருந்து புசித்திடக் கிடையா
தாகுல
மிகுத்துளங் கலங்கிச்
செகதல முழுதுந்
திரிந்தலைந் தவர்க
டிரவியக்
குவைபல வெதிர
விகலற வெடுத்து மனைமிசை
புதைத்தோ
ரிதயபங்
கையங்களிப் பென்ன
மகிதல முழுதுந் துதிசெயக்
கரிய
மழைமுகிற்
கருவுதித் ததுவே.
11
(இ-ள்)
அவ்வாறு செய்ய, வீட்டின்கண் ணுறைந்து உண்ணுவதற்கு
அகப்படாமல் வருத்தமானது அதிகரித்து மனங் கலக்கமடைந்து
இப்பூமியினிடங்க ளெல்லாவற்றிலுஞ் சென்று
அலைந்தவர்கள் பல பொற்குவியல்கள் முன்வர, அவற்றை
விரோதமற எடுத்து வீட்டின் கண் புதைத்தவர்களது மனமாகிய
தாமரை மலரினது மகிழ்ச்சியைப் போலும் மகிழ்ச்சியைக்
கொள்ள, பெருமை பொருந்திய இப்பூமி முழுவதும் போற்றும்
|