இரண்டாம்
பாகம்
முன்னிட நதிக ணிறைந்துமே
லெழுந்து
மோதிடச் செறுக்கரை தகர்த்து
மன்னிய விருபால்
வகுத்திடுங் காலை
மடையுட னெடுத்தெறிந் தனவே.
4
(இ-ள்)
அவ்வாறு பொழிந்த மழையானது மின்னலோடு இடியையும்
முழக்கவும், தேரின் மீது திரிகின்ற சூரியன் மறைந்து
பின்னாகவும், இரவிலும் பகலிலும் அந்தகாரமானது
விளங்கவும், கலங்கிய நீரானது எவ்விடத்தும் பரவி
முன்னாற் செல்லவும், ஆறுகள் பூரணப்பட்டு எழும்பி
மோதவும், வயல்களினது கரைகளைப் பொடித்துப் பொருந்திய
இரண்டு பக்கத்திலும் வகுத்த கால்களை மடையோடு மெடுத்து
வீசிற்று.
4755. வேயினை
முறித்து வெடித்தமுத் தனைத்து
முல்லையம் புறவினுக் களித்துத்
தூயநெய் தயிர்பால்
கடத்துட னெடுத்துச்
சுடுநிலப் பாலையிற் செறித்து
நேயபைந் நாக மணியினை
மருத
நிலத்தினிற் றொகுத்துநெற் குவிமேற்
போயதை நெய்த
னிலத்திலிட் டுப்பைப்
புணரியிற் புகுத்தின வெள்ளம்.
15
(இ-ள்)
அவ்வாறு பொழிந்த மழையினாலுண்டான வெள்ளமானது
மூங்கில்களை யொடித்து அந்த மூங்கில்கள் வெடித்ததினா
லுண்டாகிய முத்துக்க ளெல்லாவற்றையும் அழகிய முல்லைப்
புறவிற்குக் கொடுத்து அந்த முல்லை நிலத்திலுள்ள
பரிசுத்தத்தைக் கொண்ட நெய்யையுந் தயிரையும் பாலையுங்
குடத்தோடு மெடுத்துச் சுடுகின்ற பாலை நிலத்திற்
சேர்த்து அப்பாலை நிலத்திலுள்ள நேயத்தையுடைய
படத்தைக் கொண்ட சர்ப்பங்களினது இரத்தினங்களை மருத
நிலத்திற் கொண்டு போய்க் கூட்டி அம்மருத
நிலத்திலுள்ள நெற்போர்களின் மீது சென்று அந்தப்
போர்களை நெய்த நிலத்திற் கொண்டு போய்ப் போட்டு
அந்நெய்த நிலத்திலுள்ள உப்பைச்
சமுத்திரத்தினிடத்துப் புகுத்திற்று.
4756. வீடுக
டிறந்து வெளியிடை புகுந்து
வேண்டுவ
திவையென விரும்பித்
தேடுவ தேடிச் சமைத்துண
வரிதாய்ச்
சிறார்மனை தொறுமிருந் தலறப்
பாடுறு பசிகண் டவரனை
மார்கள்
பயோதரந் தனைமுனிந் தினிமேற்
கேடறு மழைதா னுலகெலாம்
பெய்து
கெடுத்திட வந்ததென் றுரைப்பார்.
16
|