இரண்டாம்
பாகம்
(இ-ள்) அன்றியும், வீடுகளைத் துறந்து
வெளியின் கண் சென்று வேண்டப்படுபவைகள் இவையென்று
பிரியமாய்த் தேடுபவைகளைத் தேடிச் சமைத்து உண்பதற்கு
முடியாமற் சிறுவர்கள் வீடுகள்தோறுமிருந்து கதற அதனால்
துன்பத்தைப் பொருந்திய அவர்களது பசியை அவர்களது
தாய்மார்கள் பார்த்து அம்மேகத்தைக் கோபித்து
இனிமேல் கேடற்ற மழை தான் உலக முழுவதும் பெய்து
கெடுக்கும்படி வந்ததென்று சொல்லுவார்கள்.
4757. நளிர்புனல்
பரந்து தலைக்கடை கடந்து
நலந்தரு
மனைப்புறஞ் செய்ய
குளிருடன் வாடைக்
காலும்வந் தடிப்பக்
கொழுந்துவிட் டெரிகன றழுவி
வெளிவர வரிதா யிருந்தவ
ரலது
மெலிந்தவ
ரிளைஞர்க ளெவரு
மொளிவிடு நகைகள்
கிடுகிடென் றடிப்ப
வுடற்பட
படவென் மிடைவார்.
17
(இ-ள்)
அன்றியும், குளிர்ந்த அந்த நீரானது எவ்விடத்தும் பரவி
முதலிலுள்ள பிரதான வாயிலைத் தாண்டி நலத்தைத் தருகின்ற
வீட்டினது பக்கத்தில் வந்து சேரவும், குளிருடன் வாடைக்
காற்றும் வந்து வீசவும், கொழுந்து விட்டு எரியா நிற்கும்
நெருப்பைச் சேர்த்து வெளியில் வருவதற்கு அருமையாக
இருந்தவர்களல்லாமல் மெலிந்தவர்கள் சிறுவர்களாகிய
அனைவர்களும் பிரகாசத்தை வீசுகின்ற பற்கள்
கிடுகிடென்று ஒன்றோடொன்று அடிக்கவும், சரீரமானது
படபடவெனவு மிருந்து வருந்துவார்கள்.
4758. காற்றொடு
குளிரு மடிப்பதாற் றொறுக்கள்
காடெலாங்
கிடந்துயிர் விடுப்ப
வேற்றமா யயங்கள்
கயம்புகக் கமல
மிழுப்பன
வெண்ணிறந் தனவா
லாற்றினைக் கடந்தோ
ராறுசெல் லரிதா
யாறிரு
நாண்மழை பெயலால்
வேற்றொரு நகர்க்குஞ்
செலவரி தாகி
மெலிந்தன
வுலகினி லெவையும்.
18
(இ-ள்)
அவ்வாறு காற்றுடன் குளிரும் வீசுவதனால் பசுக்கள் காடு
முழுவதுங் கிடந்து தங்களது பிராணனை விடுக்கவும், கயங்கள்
ஏற்றமாய்க் குளங்களிற் போய்ச் சேர, நீரா
லிழுக்கப்பட்டவைகள் கணக்கற்றன. அன்றியும்,
பன்னிரண்டு நாள் அந்த மழை பெய்ததனால் ஆறுகளைத் தாண்டி
வேறு ஓர் மார்க்கத்திற் போவதற்கு அருமையாகி
உலகினிடத்துள்ள
|