இரண்டாம்
பாகம்
அனைத்தும் வேறு ஒரு ஊருக்கும்
போக முடியாமல் தளர்வடைந்தன.
4759. பிறந்ததீ
விருட்டிப் பொழிந்தன வுலகம்
பேதுறற்
றணிப்பதற் கினிமே
லறந்தவா வாய்மை
முகம்மதே யன்றி
யாற்றுதற்
கியாருள ரென்னச்
சிறந்தசு காபி மார்களி
லொருவர்
சிந்தைகூர் புகர்தின மதனி
னிறைந்திடு மொழிசேர்
குத்துபா வோது
நேரத்திற் சென்றடி வணங்கி.
19
(இ-ள்)
அவ்வாறடைய, அசுஹாபிமார்களி லொரு அசுஹாபியானவர் நாம்
பிறந்த இந்த தீவானது இருட்டி இவ்வாறு மழை பொழிந்தன.
இதனால் இவ்வுலகமானது மதி மயங்குவதைத் தணிப்பதற்கும்
ஆற்றுவதற்கும் இனிமேல் புண்ணியமானது குறையாத
சத்தியத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களேயல்லாமல் யாவருளர்?
ஒருவருமில்லரென்று சொல்லிச் சிறப்பாய் மனமானது
மகிழ்ச்சியடைகின்ற வெள்ளிக்கிழமையில் நிறைந்த
வசனத்தைப் பொருந்திய குத்துபா ஓதுகின்ற
சமயத்திற்போய் அவர்களது பாதங்களிற் பணிந்து.
4760. தருமமு
மறிவு மொழுக்கமும் பொறையுந்
தயவுமோர்
வடிவென வெடுத்தே
வருதிரு நபியே யிருசது
தினமாய்
மழைபொழி
தரநில வலையம்
வெருவரல் பெரிதாய்
மெலிவது தவிர
மேன்மையும் வளமையுங் கொடுக்கக்
கருமுகி லகலத் துவாச்செயு
மென்றார்
கபீபிற
சூலவை செய்தார்.
20
(இ-ள்)
புண்ணியமும் ஞானமும் சன்மார்க்கமும் பொறுமையுங்
கிருபையும் ஓர் வடிவமானாற் போலும் வடிவத்தைத் தாங்கி
இவ்வுலகத்தின் கண் வந்த தெய்வீகந் தங்கிய நபிகட்
பெருமானே! பன்னிரண்டு நாளாக மழை பெய்ய, அதனால் இப்
பூவுலகமானது பயமதிகமாகி வாடுவது ஒழியவும், சிறப்பையும்
செல்வத்தையுந் தரவும், கரிய மேகமானது நீங்கவுந்
துஆச்செய்யுங்களென்று சொன்னார்கள். ஹபீபென்னுங்
காரணப் பெயரை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார்.
|