இரண்டாம்
பாகம்
நபிசெய்யிதுனா செய்யிதுல்
குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும்
அவ்வாறு துஆச்செய்வார்கள்.
4761. நன்மைக
ளெவர்க்கு நடத்திட வந்த
நபிதுவாச்
செய்திட முகிலுந்
தென்வரை முதலாம்
வரைகளிற் புகுந்த
தினகரன்
விசும்பிடை செறிந்தான்
புன்மர முதலா மானிட
ரீறாப்
புவியினி
லுயிருள வனைத்துந்
தன்மமு நெறியுந் தவறிலா
தீனர்
குலமெனத் தழைத்துயர்ந் தனவே.
21
(இ-ள்)
யாவருக்கும் நன்மைகளை நடத்தும்படி இவ்வுலகத்தின் கண்
வந்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் அவர்கள் அவ்வாறு துஆச்செய்ய, அந்த மேகமும்
பொதிகைமலை முதலிய மலைகளிற் போய்ச் சேர்ந்தது.
சூரியன் ஆகாயத்தின் கண் சேர்ந்தான். புல், மர முதலாக
மக்களீறாக இப்பூமியின் கண்ணுள்ள ஜீவராசிகளியாவும்
புண்ணியமுஞ் சன்மார்க்குமுந் தவறாத தீனுல்
இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடையவர்களது
கூட்டத்தைப் போலுந் தழைத்து ஓங்கின.
|