பக்கம் எண் :

சீறாப்புராணம்

1733


அந

இரண்டாம் பாகம்
 

அந்தகன் படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4762. தாரணி முழுதுந் தீனெனும் வழியே

         தான்வர வருள்புரி வள்ள

     லாரண மறைசேர் சகுபிகள் பரவ

         வரசுசெய் திருக்குமந் நாளிற்

     காரண மெவரு முணர்த்திடக் கேட்டுக்

         கருதியோர் பிறவியந் தகனும்

     பூரணக் கிருபைக் கடலெனு நபியைப்

         போற்றிநின் றவரடி புகழ்ந்தே.

1

     (இ-ள்) இப்பூலோக முழுவதையும் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தின் பாதையில் வரும் வண்ணம் கிருபை செய்த வள்ளலாகிய நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தின் இரகசியங்கள் பொருந்திய அசுஹாபிமார்கள் துதிக்கும் வண்ணம் இராசரீகஞ் செய்து கொண்டிருக்கின்ற அந்தக் காலத்தில், அவர்களது காரணங்களை யாவருந் தெரிவிக்க, அதை ஒரு பிறவிக் குருடனுங் கேள்வியுற்று இதயத்தின் கண் சிந்தித்து நிரப்பமாகிய கருணாசமுத்திரமென்று சொல்லும் அந்நபிகட் பெருமானவர்களைத் துதித்து அவர்களது பாதங்களைப் போற்றி நின்று.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4763. தாய்முக மறியேன் பெற்ற தனையரை யறியேன் றந்தை

     மேயதோர் வடிவங் காணேன் மின்னிடை மடவார் முன்னம்

     போயவர் நகைக்கப் பெற்றேன் புறத்தொரு பொருளுங் காணேன்

     றூயவ வெவையுங் காணத் துணைவிழி தருவி ரென்றான்.

2

     (இ-ள்) பரிசுத்தத்தைக் கொண்ட நபிகட் பெருமானே! யான் எனது தாயினது வதனத்தை இன்னவிதமென்று கண்டிலன். பெற்ற பிள்ளைகளை இன்னவிதமென்று கண்டிலன். எனது பிதாவானவர் பொருந்திய ஒப்பற்ற வடிவத்தையுங் கண்டிலன். மின்னலைப் போன்ற மருங்குலையுடைய பெண்களது முன்னர்ச் சென்று அவர்களால் நிந்திக்கப் பெற்றேன். வெளியிலுள்ள ஒரு