பக்கம் எண் :

சீறாப்புராணம்

1734


இரண்டாம் பாகம்
 

பதார்த்தத்தையுங் கண்டிலன். ஆதலால் இவைகள் எல்லாவற்றையும் பார்க்கும் வண்ணம் எனக்கு இரு கண்களையும் அருளுங்களென்று சொன்னான்.

கலிவிருத்தம்

 

4764. கல்ல டர்ந்த புயத்து கபீபெனும்

     நல்ல வாய்மை நபியவன் றன்னைநீ

     யொல்லை யிற்சென் றுலுச்செய்து மாமறை

     சொல்லி ரண்டிறக் ஆத்துத் தொழுதபின்.

3

     (இ-ள்) அவன் அவ்வாறு சொல்ல, மலைகளையுந் தமக்கு நிகரில்லையென்று பொருதிய தோள்களையுடைய ஹபீபென்னுங் காரணப் பெயரைக் கொண்ட சத்தியத்தையுற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவனை நீ வேகமாய்ப் போய் உலுச் செய்து பெருமை பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனங்களை யோதி இரண்டு றக்ஆத்துத் தொழுதபின்னர்.

 

4765. வாய்மை நீதி நபிபறக் கத்தினா

     னாய னேயென் னயனந் தருதியென்

     றேய வண்மை துஆவிரந் தாயெனிற்

     றூய கண்க டுலங்குமென் றோதினார்.

4

     (இ-ள்) நாயகனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவே! நீ உண்மையையும் நியாயத்தையுமுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது பறக்கத்தினால் எனது கண்களை யருளக் கடவாயென்று பொருந்திய அழகிய துஆவைக் கேட்பாயேயானாற் பரிசுத்தத்தையுடைய உனது கண்கள் வெளிச்சமாகுமென்று சொன்னார்கள்.

 

4766. அந்த நன்மொழி கேட்டிசைந் தந்தகன்

     சிந்தை யார மகிழ்ந்துலுச் செய்திறை

     தந்த வேத முறைப்படி தான்றொழு

     தெந்த நாளு மிலங்குஞ் சுடரினை.

5

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அந்தக் குருடன் அந் நன்மைபொருந்திய வார்த்தைகளைக் கேள்வியுற்று அதற்குடன்பட்டுத் தனது மனமானது பொருந்தும் வண்ணங் மகிழ்ச்சியடைந்து உலுச் செய்து யாவருக்குங் கடவுளான அல்லாகு