பக்கம் எண் :

சீறாப்புராணம்

1735


இரண்டாம் பாகம்
 

சுபுகானகுவத்த ஆலாவானவன் அருளிய புறுக்கானுல் அலீமென்னும் வேத ஒழுங்கின்பிரகாரம் வணங்கி எக்காலமும் விளங்கா நிற்குஞ் சுடராகிய அல்லாஜல்ல ஷகுனகுவத்த ஆலாவை.

 

4767. உன்னி யோதித் துஆவிரந் துண்மையின்

      மன்னு மாநபி தம்பறக் கத்தினா

      லின்ன றீர விணைவிழி யீதியென்

      றன்ன வாய்மையி னோடறைந் தானரோ.

6

     (இ-ள்) நினைத்துப் புகழ்ந்து துஆக்கேட்டு சத்தியத்தோடும் நிலைத்த பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது பறக்கத்தினால் எனது துன்பங்க ளகலும் வண்ணம் எனது இருகண்களையும் அருளக்கடவாயென்று அவ் வார்த்தைப் பிரகாரம் சொன்னான்.

 

4768. மற்று வமையில் லானல் வரத்தினாற்

      குற்ற முற்ற விழியுங் குவளையை

      வெற்றி கொண்டு விரைமலர்ப் பூப்பய

      முற்றொ துங்க வுதித்த தொழுந்ததே.

7

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, வேறு ஒப்பில்லாதவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் நன்மை பொருந்திய வரத்தினால், களங்கமடைந்த அந்தக் கண்களுங் குவளைப் புஷ்பத்தை நீ எனக்கு நிகரில்லையென்று ஜெயித்து வாசனையைக் கொண்ட தாமரைப் புஷ்பமானது அச்சத்தையடைந்து ஒதுங்கும் வண்ணந் தோன்றி யெழும்பின.

 

4769. மன்றி லன்னை தரவரு நாண்முத

      லன்ற ளவுக்கு மந்தக னானவ

      னின்ற கண்வரப் பெற்றெதிர் நீங்கிய

      கன்று கண்ட கபிலையொப் பாயினான்.

8

     (இ-ள்) தனது தாயானவள் தன் வயிற்றிலிருந்து வெளியில் தர இவ்வுலகத்தின் கண் வந்த நாள் முதலாக அன்றையத் தினத் வரையுங் குருடனாயிருந்த அவன் ஒழிந்த கண்களானவை வர, ஈன்று தனது முன்னில் நின்று மகன்ற குட்டியை மறுபடியும் வரக்கண்ட பசுவை நிகராயினான்.

 

4770. பாங்கி னின்று நபிபதத் தாமரைத்

      தாங்கிச் சென்னி தனில்வைத்துக் கைகளா

      லோங்கு கின்ற சலாமுரைத் தன்னவ

      னீங்கி டாத நெடுநகர்க் கேகினான்.

9