இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவ்வாறாயின அவன் பக்கத்தில்
நின்று நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது
முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களது பாதமாகிய தாமரைப் புஷ்பத்தைத் தனது
கைகளினால் தாங்கித் தலையின் மீது வைத்து ஓங்குகின்ற
அஸ்ஸலாமுன் அலைக்கு மென்ற சலாமுஞ்சொல்லி அவன்
நீங்காத தனது நெடிய நகரத்திற்குச் சென்றான்.
4770. திரைசெய் வாரித் திசைசெறிந்
தீண்டிய
வரசர் போற்றிய ஆல
நபிமறை
யுரைசெய் தோங்கு
முயர்புக ழியாவரும்
பரவ வாழ்வு பரிந்துறு
நாளினில்.
10
(இ-ள்)
அவ்வாறு செல்ல, அலைகளைச் செய்கின்ற சமுத்திரமானது
எண்டிசைகளிலும் நெருங்கிச் சேர்ந்த இவ்வுலகத்தி
னிடத்துள்ள வேந்தர்கள் துதிக்கின்ற நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் புறுக்கானுல் அலீமென்னும்
வேதவசனங்களை யோதி வளரா நிற்கும் உயர்ந்த
கீர்த்தியையுடையவர்க ளனைவர்களும் வணங்கும் வண்ணம்
அன்போடும் வாழ்வு பெற்றிருக்கின்ற காலத்தில்.
4772. உந்து தீவினை யூழ்வலி யாலுள
நொந்த யர்வுற்
றியாதனை நோயினாற்
சிந்தை வாடு
மொருவனோர் தேமலர்க்
கொந்து லாவு புயனைமுன்
கூவியே.
11
(இ-ள்)
ஓங்கா நிற்குந் தீவினையினது ஊழ்வலியினால் மனமானது
வருந்திச் சோர்வடைந்து துன்பத்தைச் செய்கின்ற
பிணியினால் சிந்தையானது மெலியப் பெற்ற ஒருவன்
ஒப்பற்ற தேனைக் கொண்ட புஷ்பக் கொத்துக்களினாற்
செய்யப்பட்ட மாலையானது குலாவுகின்ற தோள்களையுடைய
ஒருவனைத் தன் பக்கத்திற் கூப்பிட்டு.
4773. ஏய நோயிலி யான்படும்
பாடெலாந்
தூய ராம்பய
காம்பர்க்குச் சொல்லென
மேய தூதன்
விரைந்துசென் றன்னவர்
நேய பாத
மிறைஞ்சிநின் றேத்தியே.
12
(இ-ள்)
பொருந்திய நோயினால் யான் படுகின்ற துன்பங்க
ளெல்லாவற்றையும் பரிசுத்தத்தை யுடைய பயகாம்ப ராகிய
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
|