பக்கம் எண் :

சீறாப்புராணம்

173


முதற்பாகம்
 

(இ-ள்) குணமலை போன்ற அழகினை யுடைய பெருமையிற் சிறந்தவர்களான நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை ஆடு மேய்ப்பதற்காய்க் கிளைகள் விரிந்த நிழல்களிலும், பரிசுத்தமான பசியப்புற்களையுடைய பக்கங்களிலும், பொருந்திய பரிமளமானது கமழப் பெற்ற தாமரை மலர்கள் மலர்ந்த குளங்கள் தங்கிய இடங்களிலும், யாவர்கட்கும் உணவானது உறைந்த பழங்களுற்ற ஒருங்குகளிலும், கூட்டிக் கொண்டு போகுங்களென்று சொன்னார்கள்.

 

400. இலங்கிழை யலிமா கூறும் வார்த்தைகேட் டிளையோ ரெல்லா

    நலங்கிளர் மனம்பூ ரித்து நன்மொழி யீதென் றெண்ணித்

    துலங்குசெம் மணியைச் சூழ்ந்த பலமணி போலச் சூழ்ந்து

    குலங்கெழுங் கொறியின் பின்னே முகம்மதைக் கூட்டிச் சென்றார்.

10

      (இ-ள்) பிரகாசிக்கின்ற ஆபரணங்களையுடைய ஹலிமா அவர்கள் சொல்லும் அவ்வித வார்த்தைகளைக் காதுகளினாற் கேட்டு அங்கு கூடிநின்ற இளம்பருவத்தையுடைய பிள்ளைகளனைவரும் நன்மையானது ஓங்கும் தங்களது மனதின் கண் மகிழ்ச்சி கொண்டு இதுவே நல்ல சமாச்சாரமென்று உள்ளத்தில் நினைத்து ஒளிரா நிற்கும் சிவந்த மாணிக்கத்தை வளைந்த பலவித விரத்தின வர்க்கங்களைப் போல நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை வளைந்து மேன்மையானது நிறைந்த ஆட்டுக் கூட்டங்களின் பின்னால் கூட்டிக்கொண்டு போனார்கள்.

 

401. பருதியின் கரங்கள் காணாப் பாசடை செறிந்த நீழற்

    றருவிடை முகம்ம தென்னுஞ் சலதரக் கவிகை வேந்தை

    யிருமென விருத்திச் சூழ்ந்த விளையரிற் சிலர்புற் கானிற்

    றிருவைமேய்த் தருநீ ரூட்டித் தோன்றுவ ரலது நீங்கார்.

11

     (இ-ள்) அவ்வாறு சென்ற சிறுவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் என்னும் மேகக் குடையையுடைய அரசரானவர்களைச் சூரியனது கிரணங்கள் தோற்றப்படாத பசிய இலைகள் நெருங்கிய நிழல்களையுடைய ஒரு மரத்தடியின்கண் இருங்களென்றிருக்கச் செய்து சூழ்ந்து நிற்கும் சிறுவர்களில் சிலர் புற்களையுடைய காடுகளிற்போய் ஆடுகளை மேய்த்து அரிதான நீரை அருந்தித் திரும்புவார்களே யல்லாமல் ஒரு போதாயினும் நபிகணாயக மவர்களை விட்டும் நீங்கினவர்களல்லர்.