|
முதற்பாகம்
பணிவிடைகளைக் கேட்டு மனம் வாக்கு
காயமாகிய இம் மூன்றும் ஒன்றுபட அவைகளைச் செய்து முடித்து
அவ்விடத்தில் தானே தங்கியிருப்பார்கள்.
405. நன்றிகொ ளிளையோ ரெல்லா நறைமுகம் மதுவை
யார்க்கும்
வென்றிகொ ளரசா
வைத்து வேறுவே றதிகா ரத்தா
ரென்றவ ரவர்க்கே
பேரிட் டிருந்தடி பணிந்து சார்ந்த
மன்றல்சே ருவாயி
னீழன் மகிழ்ந்தினி திருக்கும் போதில்.
15
(இ-ள்)
அவ்வாறக விருக்கும் நாட்களிலொரு நாள், உபகார குணம்
படைத்த ஆடு மேய்க்கும் அச்சிறுவர்கள் யாவர்களும்
கஸ்தூரி வாசனை மாறாத காத்திரத்தையுடைய நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் தங்களில்
யாவர்கட்கும் வெற்றிகொள்ளும் அரசராக நேமித்து வைத்து
மற்றப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அதிகாரத்தை
யுடையவரென்று அவரவர்கட்கே ஒவ்வொரு பெயருமிட்டு இருந்து
அந் நபிகணாயக மவர்களின் பாதங்களை வணங்கிப்
பொருந்திய பரிமளந் தங்கிய உகா என்னும் ஒரு மரத்தின்
நிழலில் மகிழ்ச்சியுற்று இனிதாக விளையாடிக்
கொண்டிருக்கும் அந்தச் சமயத்தில்.
406. பட்டுடை யினராய்ச் சாந்தம் பழகுதோ னினராய்
வாய்ந்த
கட்டழ கினராய் வீசுங்
கதிர்மதி வதன ராய்மெய்க்
கிட்டகஞ் சுகரா
யாண்மை யிலங்கும்வா லிபராய்ச் சோதி
விட்டொளிர் மின்னி
னொப்ப விரைவினி லிருவர் வந்தார்.
16
(இ-ள்)
அவ்விடத்தில் இருவர்கள் பட்டு வஸ்திரங்களை
யுடுத்தினவர்களாகவும், கலவையானது பழகிய தோள்களை
யுடையவர்களாகவும், பொருந்திய பெரிய அழகினை
யுடையவர்களாகவும், பரவா நிற்கும் கிரணங்களையுடைய
சந்திரன் போன்ற முகத்தை யுடையவர்களாகவும்,
சரீரத்தின்கண் கஞ்சுகமிட்டவர்களாகவும், வலிமையானது
விளங்குகின்ற வாலிபர்களாகவும், பிரபை விட்டுப்
பிரகாசியா நிற்கும் மின்னைப் போல
அதிசீக்கிரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
407. படியகங் கெண்டி செம்பொற் பதுமமென் கரத்தி
லேந்தி
வடிவுட னொருவர் நிற்ப
மற்றொரு காளை கையிற்
றொடிபகுப் பென்னக்
கூன்வா டோன்றிட வெதிர தாகத்
திடமுட னிற்பக் கண்டு
சிறுவர்கள் கலக்க முற்றார்.
17
(இ-ள்)
அவ்வாறு வந்த இருவர்களி லொருவர் தமது சிவந்த
பொற்றாமரை மலர் போலுங் கைகளில் அழகுடன் ஒரு
படிக்கமும் கெண்டிகையு மேந்திக்கொண்டு நிற்கவும், இளம்
பருவத்தையுடைய மற்றொருவர் தமது கையில் வளையலினது
|