பக்கம் எண் :

சீறாப்புராணம்

176


முதற்பாகம்

 

பாதிபோலும் வளையினையுடைய ஒரு வானைப் பிரகாசிக்கும்படி முன்னதாக வலிமையுடன் பிடித்துக் கொண்டு நிற்கவும், அங்கு விளையாடிக் கொண்டு நின்ற சிறுவர்களெல்லாவரும் பார்த்து மனசின்கண் பயமடைந்தார்கள்.

 

408. சிறுவர்க ளுள்ளந் தேம்பித் திடுக்கிட நிற்குங் காலை

    மறுவகன் மதியம் போன்ற முகம்மதை யடுத்துப் பாரி

    லிறையவன் றூதே யெங்கட் கின்னுயிர்க் குயிரே யென்ன

    நறைமலர்க் கரத்தைப் பற்றி நடந்துவாய் நிழலி லானார்.

18

     (இ-ள்) அக்கானகத்தில் கூடிநின்ற சிறுவர்கள் அவ்விதம் மனமானது வாட்டமுற்றுத் திடுக்கிடும்படி நிற்கும்போது, குற்றமற்ற சந்திரன் போன்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை வந்த விருவர்களும் நெருங்கி இப்பூமியின்கண் யாவற்றிற்கு மிறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாக வந்தவரே எங்களது இனிமை பொருந்திய உயிருக் குயிரானவரே! என்று சொல்லிப் புகழ்ந்து அவர்களின் வாசனையுற்ற தாமரைமலர் போலுங் கையினைப் பிடித்துக் கொண்டு நடந்து அந்த உகாமரத்தினது நிழலின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

409. தருநிழ லிடத்தில் வள்ள றன்முனும் பின்னு மாக

    விருவரு மிருப்பக் கண்ட விளையவ ரனைத்து மேங்கி

    வெருவுவ ருள்ளந் தேறா மெலிகுவ ரிவரியா ரென்ன

    வுருகுவர் கரைவர் கண்ணீரொழுகிட வொருங்கு நிற்பார்.

19

     (இ-ள்) அந்த உகாமரத்தினது நிழலின்கண் போய்ச் சேர்ந்த இரண்டு பேர்களும் வரையாது கொடுக்குந் தகமைத் தினராகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னும் பின்னுமாக இருக்கப் பார்த்த சிறுவர்களெல்லாரும் ஏக்கமுற்றுப் பயப்படுவார்கள். மனமானது தேறுதலடையாது வாடுவார்கள். இவ்விதம் வந்து நமது நாயகத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிற இவர்கள் யாவர்களென்று சொல்லிக் கரைவார்கள். அழுவார்கள். இரண்டு கண்களிலுமிருந்து ஜலமானது ஒழுகும்படி யாவர்களும் ஒன்றுகூடி ஓரிடத்தில் நிற்பார்கள்.

 

410. பதறுவர் கலங்கி யேங்கிப் பதைபதைத் தலறி விம்மிக்

    கதறுவ ரந்தோ வென்னக் கலங்குவர் கலன்க ளியாவுஞ்

    சிதறிட வோடி யோடி திரும்பிநெட் டுயிர்ப்பு வீங்கி

    யிதயநொந் தாவி சோர விடைந்துவா டுவர்க ளன்றே. 

20