பக்கம் எண் :

சீறாப்புராணம்

1751


இரண்டாம் பாகம்
 

பெரிய சிறகுகள் நெருங்கிய சரீரமானது பிரகாசத்தை வீசும் வண்ணம் இப்பூலோகமும் எண்டிசைகளும் துதிக்கா நிற்கும் ஜிபுரீ லலைகிஸ்ஸலாமவர்கள் அங்கு வந்தார்கள்.

 

4816. ஆண்டு சென்ற அகுமதை நோக்கிநின்

     றீண்டு காலி திபுனுவ லீதுதான்

     கூண்டு போர்செய் குறைசிக ளோடெறுழ்

     வேண்டு கின்ற படையொடு மேவியே.

18

      (இ-ள்) அவ்வாறு வந்த அவர்கள், அங்கே போகின்ற அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் பார்த்து நின்று இங்கே காலி திபுனு வலீமென்பவன் யுத்தஞ் செய்யுங் குறைஷிக் காபிர்களோடும் கூடி வலிமையை வேண்டுகின்ற சைனியங்களோடும் பொருந்தி.

 

4817. இணையி லாகமீ மென்னுந் தலத்தின்முன்

     னணிய தாக வழிமறித் தாக்கமுட்

     டுணிவி னுற்றன னாங்கெனச் சொல்லிவான்

     பணியும் வேந்தர் பரந்தெழுந் தேகினார்.

19

      (இ-ள்) ஒப்பற்ற ஹமீமென்று சொல்லுந் தானத்தின் முன் வரிசையாகச் செல்லுகின்ற பாதையை மறித்து எழுச்சியைக் கொண்ட மனத்துணிவோடு அங்கே இருக்கின்றானென்று சொல்லி வானலோக முழுவதும் வணங்கா நிற்கும் அரசரான அந்த ஜிபுரீ லைகிஸ்ஸலாமவர்கள் பரவி யெழும்பி ஆகாயத்தின் கண் சென்றார்கள்.

 

கலிநிலைத்துறை

 

4818. அந்த நன்மறை வாக்கியங் கேட்டக மகிழ்ந்து

     சிந்தை கூர்ந்தசு காபிகட் கிவ்வுரை செப்பி

     வந்தி ருக்குங்கா லிதுக்குநேர் வலதுபா ரிசமா

     நந்த லில்வழி செலுமென நடத்தினர் நபியே.

20

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சலூ சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த நன்மை பொருந்திய வேதவசனத்தைக் கேள்வியுற்று மனமானது சந்தோஷிக்கப் பெற்று இந்தச் சமாச்சாரத்தை அசுஹாபிமார்களுக்குச் சிந்தை கூர்ந்து