|
இரண்டாம்
பாகம்
சொல்லி அங்கே
வந்திருக்கின்ற காலிதென்பவனுக்கு நேர் வலது
பக்கமாய்க் கெடுதலற்ற பாதையொடு போகுங்ளென்று
அவ்வழியாக யாவையும் நடத்தினார்கள்.
கலிவிருத்தம்
4819. இனைய
செய்கை யுணர்த்திலன் வஞ்சக
நினையுங் காலிது
நீணெறி யாவையு
முனையிற் காப்ப
முகம்மதும் வென்றிசே
ரனைவ ரும்வருந் தூளிகண்
டையுற்றான்.
21
(இ-ள்) அவ்வாறு நடத்த, இந்தச் செய்கையை
யறியாதவனான கபடத்தை நினைக்கின்ற அந்தக்
காலிதென்பவன் நீண் பாதைகளெல்லாவற்றையுந்
துணிவோடுங் காத்திநிற்க, நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது
மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் வெற்றியைப்
பொருந்திய மற்ற யாவர்களும் வருகின்ற தூசியைப்
பார்த்துச் சந்தேகமடைந்தான்.
4820.
பார்த்து வேகப் பரியை நடாத்திப்போர்
கூர்த்தி ருந்த குறைசிகண்
முன்புசென்
றார்த்த தூளி விசும்பின்
ளாவமுன்
போர்த்த சேனை யொடுநபி
புக்கினன்.
22
(இ-ள்) அவ்வாறு சந்தேகமடைந்த அவன
அத்தூசியைப் பார்த்து விரைவைக் கொண்ட தனது குதிரையை
நடத்தி யுத்தத்தை விரும்பியிருந்த அந்தக் குறைஷிக்
காபிர்களது முன்னாற் போய் ஆர்த்த தூசிகள்
ஆகாயத்தின் கண் அளாவும்படி முன்னால் மூடிய
சைனியங்களோடும் முகம்மதென்பவன் இங்கே வந்து
சேர்ந்தான்.
4821. என்று
கூற வவரெச்ச ரிக்கையாயச்
சென்று பின்னுற வாங்கித்
திரண்டனர்
நன்றி சேர்நபி யும்படை
யும்பய
மின்றி யேதனிய்
யாமலைக் கெய்தினார்.
23
(இ-ள்) என்று சொல்ல, அந்தக் குறைஷிக்
காபிர்கள் கவனமாய்ப் போய்ப் பின்னாற் பொருந்தும்
வண்ணம் வாங்கிக் கூடினார்கதள். நன்றி பொருந்திய நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களும் அவர்களது சைனியங்களும் அச்சமில்லாமல்
தனிய்யாமலைக்குப் போனார்கள்.
|