பக்கம் எண் :

சீறாப்புராணம்

1755


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு போய் வலிமையானது ஓங்கப் பெற்ற தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்க ளனைவர்களும் சத்தியதைப் பொருந்திய பயகாம்பரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அதிகரித்த செல்வமானது செறிந்த திரு மக்கமா நகரத்திற்குச் சமீபமாகச் சமீபித்து அங்குள்ள குதைபிய்யா என்னுந் தானத்திற் சேர்ந்தார்கள்.

 

4829. அத்த லத்தி லிறங்கி யசும்புறப்

     பைத்தற் சூழி படுமல ரியாவையு

     மொய்த்த டர்ந்துமுன் சென்றவ ரார்தர

     வெய்த்தி ளைத்துப்பின் னெய்தின ரீண்டியே.

31

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்த அவர்கள் அந்த இடத்தி லிறங்கிக் கிணறுகளைக் கொண்ட மிகவும் பசுமையான நீரைப் பொருத்துங்குளங்களாகிய எல்லாவற்றையும் மொய்த்து நெருங்கி முன் சென்று நிறையும்படி எய்த்து இளைத்துப் பின்னர் ஒன்றாகக் கூடி வந்தார்கள்.

 

4830. ஆண்டு றூமவ் வலந்தையி னிற்பயங்

     கீண்டி னார்க்குங் கிடைப்பரி தாலவர்

     வேண்டு திக்கும் விரைந்துசென் றெங்கணுங்

     காண்ட மின்றி கபீபுமுன் னெய்தியே.

32

      (இ-ள்) அவ்வாறு வந்த அவர்கள் அங்கே பொருந்திய அந்தக் குளங்களில் தோண்டுபவர்களுக்குந் தண்ணீர் கிட்டுவது அருமையானதினால் வேண்டிய திசைகளிலெல்லா வற்றிலும் வேகமாய்ப் போய் எவ்விடத்தும் நீரில்லாமல் ஹபீபென்னுங் காரணப் பெயரை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லலமவர்களது முன்னிலையில் வந்து சேர்ந்து.

 

4831. வாய்பு லர்ந்துமெய் வாடி விழியொளி

     போய்ம யங்கிப் புலம்பிக் கலங்கியா

     மேய தாக மிகுத்தன மித்துயர்

     நீயி ரன்றெவர் நீக்குவர் நீதியீர்.

33

      (இ-ள்) நியாயத்தையுடைய நபிகட் பெருமானே! யாங்கள் வாயானது காயப் பெற்று உடல் மெலிந்து கண்களின் பிரகாசம் போய் மயக்கமடைந்து புலம்பிக் கலங்கிப் பொருந்திய தாகமானது