பக்கம் எண் :

சீறாப்புராணம்

1757


இரண்டாம் பாகம்
 

காருண்ணியத்திப் போலவும், தடை செய்ய முடியாத துறையினது பெருக்கைப் போலவும், பெருகிற்று.

 

4835. வாவி யோடிய வாசியு மதகரித் திரளுங்

     காவ லாளருங் கதமிகு சேனையுங் கடலு

     நாவ லோர்புகழ் காரண முகம்மது நபியு

     மாவி நீருண்டு பாசறை வகுத்தவ ணமைந்தார்.

37

      (இ-ள்) அவ்வாறு பெருக, தாவியோடிய குதிரைகளும், மதத்தையுடைய யானைக் கூட்டங்களும் அரசர்களும் கோபமதிகரித்த அழகிய சேனாசமுத்திரமும் புலவர்கள் துதிக்கின்ற காரணங்களை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமான்ர நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அந்தக் குளத்தினது ஜலத்தை யருந்திப் பாசறைசெய்து அங்கே தங்கி யிருந்தார்கள்.

 

4836. இதய மன்புடன் மகிழ்ந்தினி திவ்விடத் திருப்பத்

     ததையு நாண்மலர்ப் புயநபி தமக்குத்தன் னமையாம்

     புதையி லென்பவன் தன்கிளை சிலரொடும் புகுந்து

     கதமி லாப்பய காம்பரைக் கண்டிவை கழறும்.

38

      (இ-ள்) அவ்வாறு அவர்கள் உள்ளன்போடும் சந்தோஷித்து இனிமையுடன் அந்தத் தானத்திலிருக்க, அன்றலர்ந்த புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலை நெருங்கிய அழகிய தோள்களையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குத் தன்மையாகிய புதையிலென்பவன் தனது பந்துக்களான சில பேர்களோடும் வந்து சேர்ந்து கோபமற்ற பயகாம்பராகிய அந்நபிகட் பெருமானாரவர்களைப் பார்த்து இவற்றைச் சொல்லுவான்.

 

4837. ஓது மக்கமா நகர்தனில் லுவையென்போ னீன்ற

     காதல் வஞ்சகங் கடிகொண்ட ககுபுமா மிறுவுங்

     கோது றும்பல சிற்றினத் தவரொடுங் குழுமிச்

     சீத வண்மலர்ச் சிறையெலாஞ் சிறைசெறித் தனரால்.

39

      (இ-ள்) புகழா நிற்குந் திரு மக்கமா நகரத்தின் கண் லுவையென்பவன் பெற்ற கொலைத் தொழிலையுடைய வஞ்சகத்தை மிகவுங் கொண்ட ககுபென்பவனும் ஆமிறென்பவனுங் களங்கத்தைப் பொருந்திய பல துன்மார்க்கர்களோடுஞ் சேர்ந்து குளிர்ச்சியைத் தரித்த அழகிய புஷ்பங்களையுடைய இடங்க ளெல்லாவற்றையுங் காவலாகச் செறித்தார்கள்.