பக்கம் எண் :

சீறாப்புராணம்

1763


இரண்டாம் பாகம்
 

4853. குலத்திலோர் மதலை தோன்றிக் குலத்தினை வளர்ப்ப தல்லா

     லலக்கணுற் றவர்கள் வாட வலைத்துப்போர் நடத்திக் கொன்று

     கலக்கலா மென்ன நீதிக் கதையினுங் கேட்ட துண்டோ

     துலக்கற வவரை யெல்லாந் துரந்துவே ரறுக்க வெண்ணில்.

55

      (இ-ள்) அன்றியும், குடும்பத்தில் ஒரு பிள்ளை பிறந்து அந்தக் குடும்பத்தை வளர்ப்பதேயல்லாமல் அக் குடும்பத்திலுள்ளவர்கள் வேதனையுற்றுச் சோரும் வண்ணம் வருத்தி யுத்தத்தை நடாத்திக் கொலை செய்து கலக்கலாமென்று நியாயத்தைக் கொண்ட கதைகளிலுங் கேட்டதுண்டா? விளக்கமறும்படி அவர்களை யெல்லாந் தொடர்ந்து அவர்களது வேரை யறுக்கும் வண்ணங் கருதினால்.

 

4854. பலர்களும் மிடத்தி லுற்ற படையினி லவருக் குற்றார்

     சிலருள ரடர்ந்து வெட்டிச் சிதைத்திடப் பொருந்தார் சீறிற்

     கலகமிட் டகல்வ ரென்று கருத்துவந் துறுவா வென்போன்

     மலர்தலை யுலகம் போற்றும் கபீபுமுன் வழுத்தக் கேட்டே.

56

      (இ-ள்) உங்களிடத்தி லிருக்கின்ற சைனியத்தில் பல பேர்கள் அந்தக் குறைஷியர்களுக்கு உறவினர்கள். அவர்களில் நெருங்கி வெட்டிக் கொலை செய்வதற்கு உடன்படாதவர்கள் சில பேரிருக்கின்றார்கள். நீங்கள் கோபித்தால் அவர்கள் உடனே சண்டையிட்டுக் கொண்டு உங்களை விட்டும் நீங்குவார்களென்று அந்த உறுவாவென்பவன் மனமுவந்து பரந்த இடத்தையுடைய இவ்வுலகமானது புகழா நிற்கும ஹபீபென்னுங் காரணப் பெயரைக் கொண்டு நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சந்நிதானத்திற் சொல்ல, அதைக் கேள்வியுற்று.

 

4855. மஞ்சவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க் கீமா

     னெஞ்சலி லாது புக்கி யிருந்தவ ரகல்வா ரென்ன

     வஞ்சலில் லாது சொன்னா யெனமன மழன்று சீறி

     மிஞ்சுதூஷ ணங்க ளாக வெகுண்டபூ பக்கர் சொன்னார்.

57

      (இ-ள்) அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் ஒளிரா நிற்கும் மேகக் குடையின் நிழலில் வந்த நயினாரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது