|
இரண்டாம்
பாகம்
முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குக் குறைவின்றி
ஈமானிற் சேர்ந்திருந்த அசுஹாபிமார்கள்
நீங்குவார்களென்று நீ பயப்படாமற் சொன்னாயென்று
வெப்பமா யதட்டி அதிகரித்த தூஷண வார்த்தைகளாகக்
கோபித்து பேசினார்கள்.
4856. அசுகாபி
மாரை நோக்கி யாரிவ ருரையி ரென்ன
வுசாவின னுறுவா வன்னோ ருண்மையாய் விளங்கி நின்ற
முசுகபின் படியே தீனின் முறைவழு வாத செம்மல்
புசாவலொன் றிலாது வாழ பூபக்க ரென்று சொன்னார்.
58
(இ-ள்) அவர்கள் அவ்வாறு பேச, அந்த
உறுவாவென்பவன் அசுஹாபிமார்களைப் பார்த்து இவர்
யாவர்? அதைச் சொல்லுங்களென்று விசாரித்தான். அதற்கு
அவர்கள் சத்தியமாய் விளக்கமுற்று நின்ற புறுக்கானுல்
மஜீதென்னும் வேதத்தின்படி தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்தி னொழுங்கிற் பிசகாத அரசராகிய
புசாவலொன்றில்லாது வாழுகின்ற அபூபக்கர் சித்தீகு
றலியல்லாகு அன்கு என்று சொன்னார்கள்.
4857. அடல்வலி
யுறுவா வென்போ னபூபக்கர் தம்மை நோக்கித்
திடமுடன் மதித்தி டாதென் செவிசுட வுரைத்தீர் முன்னந்
தொடர்வுற வெனக்கு நீரோர் நன்றிசெய் சூழ்ச்சி யாலே
யுடனுரை யாது நின்றே னன்றியே லுரைசெய் வேனால்.
59
(இ-ள்) அவ்வாறு சொல்ல, வெற்றியையும்
வீரத்தையுமுடைய அந்த உறுவாவென்பவன் அந்த அபூபக்கர்
சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களைப் பார்த்து நீவிர்
என்னை மதிக்காமல் தைரியத்தோடும் எனது காதுகள் சுடும்
வண்ணந் தூஷண வார்த்தைகளைப் பேசினீர். ஆதியில்
நீவிர் எனக்கு நேசமுறும்படி ஒரு நன்றி செய்த
சூழ்ச்சியினால் யான் இப்போது உம்மோடு பதிற்
பேசாமலிருந்தேன். அல்லாவிட்டாற் பதிற் பேசுவேன்.
4858. என்றுரை
கூறிப் பின்னு நபியெழில் வதன நோக்கி
நின்றுகை யாரத் தாடி தாங்கிச்சொன் னிகழ்த்தும் வேலை
மின்றிகழ் வடிவா ளேந்து முகைறத்து விறல்செய் வாளா
லன்றவன் கரத்தைத் தட்டி யகலநின் றறைதி யென்றார்.
60
(இ-ள்) என்று சொல்லி மறுபடியும் நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது
ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல்
அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது அழகிய
முகத்தைப்
|