|
இரண்டாம்
பாகம்
(இ-ள்) யான் கீர்த்தியையும்
பெருமையையுமுடைய அந்த முகம்மது நபி யென்பவரிடத்திற்
போய்ச் சேர்ந்தேன். அவர் புதையிலென்பவன் வந்து
சொன்ன வார்த்தைகளில் ஒன்றும் பிசகாமல் நீ போய்ச்
சொல்லென்று எனக்கும் அந்தச் சமாச்சாரத்தையே
சொன்னார். யான் அதை மனதின் கண் கொண்டு இங்கு வந்து
சேர்ந்தேன். இன்னும் பிரபல்யமான அவரது மேன்மையைக்
கொண்ட செய்கைகளைச் சொல்லக் கேளுங்கள்.
4865. நாவினி லூறு மிச்சி
லுமிழ்ந்திடி னான வாச
மேவிய தென்னப் பூச விரும்புவர் சிலபேர் பின்னு
மோவறத் தொழுகைக் காலத் துலுச்செயும் புனலை வேட்டுத்
தாவறக் கரங்க ளேந்தித் தளர்பவர் சிலபே ரம்ம.
67
(இ-ள்) சில பேர்கள் அவர் தமது
நாவினிடத்துச் சுரக்கின்ற மிச்சிலை யுமிழுந்தால்
அதிற் கஸ்தூரி வாசனை பொருந்தியிருக்கின்றதென்று
அதைத் தங்களது சரீரத்தின் கண் பூசும் வண்ணம்
பிரியப்படுவார்கள். பின்னரும் சில பேர்கள்
தொழுகையினது சமயங்களில் அவர் உலுச் செய்கின்ற நீரை
விரும்பிக் குற்றமறும் வண்ணந் தங்களது கைகளையுயர்த்தி
மாறாமல் தளர்ந்து நிற்பார்கள்.
4866. செய்தொழிற் கேவ
லியாங்கள் செய்ததே பலனா மென்ன
வெய்துவர் சிலபேர் தங்க ளிருகர மொடுக்கி வாயைக்
கையினாற் புதைத்து நின்று கடாட்சவீ டணமா நோக்க
மையலங் களிறன் னாரை வணங்குவ ரனேகம் பேர்கள்.
68
(இ-ள்) அன்றியும், சில பேர்கள் அவரது
ஏவலாகிய அழகிய பணிவிடைகளுக்கு யாங்கள் செய்தது தான்
பலனாகுமென்று வந்து சேர்வார்கள். பல பேர்கள் தங்களது
இருகைகளையு மொடுக்கிக் கொண்டு வாயைக் கையினால் மூடி
நின்று அவரது கிருபைக்கண்ணினாற் பார்க்கும் வண்ணம்
உன் மத்தத்தைக்கொண்ட அழகிய யானையை நிகர்த்த
அவரைப் பணிவார்கள்.
4867. இத்தகை யுடைய வள்ளல்
கபீபிற சூல்ம கிழ்ந்து
சித்தமன் புறவே நம்மைப் புரந்திடச் செப்பும்
வார்த்தை
யுத்தம மவரைப் போற்றி யுறவுகொண் டிருந்து வாழ்தன்
மெத்தவும் விழுமி தாகு மென்றன னறிவின் மிக்கான்.
69
(இ-ள்) இவ்விதத் தன்மைகளையுடைய வள்ளலான
ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய றசூலென்பவர் களித்து
மனமானது அன்பைப் பொருந்தும் வண்ணம் நம்மை
இரட்சிக்கும்படி சொல்லிய வார்த்தைகள் மேன்மையாகும்.
நாமும்
|