|
இரண்டாம்
பாகம்
அவரைத்
துதித்து சினேகங் கொண் டுறைந்து வாழ்வது மிகவுஞ்
சிறப்பாகுமென்று புத்தியினால் மேன்மைப்பட்டவனான
அந்த உறுவாவென்பவன் சொன்னான்.
4868. அவனது
கூறத் தான்கேட் டழன்றுக னானி யென்போன்
மனதுற வுறுவா சொன்ன வார்த்தையா னாங்கு சென்று
வினவியிவ் விடத்தி லொல்லை மீள்குவ னென்னக் காபி
ரனைவர்க டமக்குங் கூறி நபியிடத் தவனும் வந்தான்.
70
(இ-ள்) அவன் அதைச் சொல்ல,
கனானியென்பவன் கேள்வியுற்றுக் கோபித்து மனமானது
பொருந்தும் வண்ணம் உறுவாவென்பவன் சொன்ன
சமாச்சாரத்தை யான் அங்கே போய்க் கேட்டு விரைவில்
இங்கு வந்து சேருவேனென்று அந்தக் காபிர்களெல்லாருக்குஞ்
சொல்லி அவனும் நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில்
ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் வந்து
சேர்ந்தான்.
4869. வந்தவ
னபியைக் கண்டே யவர்மனத் தியல்புந் தேர்ந்து
விந்தையாய் குறுபான் செய்ய வொட்டக மேல லாலே
பந்தமா யுமுறாச் செய்யப் பரிந்ததே யலது வேறு
சிந்தனை யில்லை யென்று தெளிந்தவன் மக்கஞ்
சேர்ந்தான்.
71
(இ-ள்) அவ்வாறு வந்தவனான அந்தக்
கனானியென்பவன் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா
அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து அவர்களது இதயத்தின்
கண்ணுள்ள இயல்பையு மாராய்ந்து ஆச்சரியமாய்க் குறுபான்
செய்வதற்கு ஒட்டகங்கள் பொருந்தியிருப்பதினால்
இவர்கள் கட்டுப்பாடாக உமுறாச் செய்வதற்கு அன்புற்று
வந்திருக்கின்றார்களே யல்லாமல் இவர்களுக்கு வேறு
எண்ணமில்லையென்று உணர்ந்து அவன் திரு
மக்கமாநகரத்தின் கண் போய்ச் சேர்ந்தான்.
4870. சேர்ந்தவன்
காபிர் தம்மைச் சிறப்புட னோக்கி தீனர்
வேந்தர்தங் கருத்து முன்னோர் விளம்பிய தெல்லா
மெய்யே
யாய்ந்துநான் பார்த்து வந்தேன் களங்கமொன் றில்லை
யாமாற்
காய்ந்திடா துமுறாச் செய்து போமெனக் கழற னன்றே.
72
(இ-ள்) அவ்வாறு சேர்ந்தவனான அந்தக்
கனானியென்பவன் அந்தக் காபிர்களைச் சிறப்போடும்
பார்த்துத் தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்கத்தையுடையவர்களான முஸ்லிங்களது
|