பக்கம் எண் :

சீறாப்புராணம்

1769


இரண்டாம் பாகம்
 

அரசராகிய அந்த முகம்மதென்பவரது நினைப்பும் எனக்கு முன் போய் வந்த இருவர்களுஞ் சொன்னதுமாகிய அனைத்தும் உண்மை தான். அதை நான் ஆராய்ந்து பார்த்துக் கொண்டு வந்தேன். அதில் ஒரு குற்றமுமில்லை. ஆதலால் அவர்களைக் கோபியாமல் உமுறாச் செய்து போகுங்களென்று சொல்லுவது நல்லதாகும்.

 

4871. இவனுமவ் வாறே கூற விடைந்துமெய் நடுங்கித் தங்கள்

     கவனம்வே றாகி நின்ற காபிர்க ளுரைத்தார் நம்பாற்

     றவனமா யிருந்த வுற்ற சனங்களு நபிபாற் சென்றா

     லவனியி லவன்றன் மாயைக் கடலில்வீழ்ந் தலைந்தா ரென்றே.

73

      (இ-ள்) இந்தக் கனானியென்பவனும் அந்தப்படியே சொல்ல, அங்கு நின்ற காபிர்கள் வசங் கெட்டு உடல் நடுக்கமடைந்து தங்கள் சிந்தனையானது வேறாகி நம்மிடத்தில் ஆசையாயிருந்த உறவின் முறையிலுள்ள சனங்களும் அந்த நபியென்பவனிடத்திற் போனால் இந்தப் பூமியின் கண் அவனது மாயமாகிய சமுத்திரத்தில் வீழ்ந்து அலைவார்களென்று சொன்னார்கள்.

 

4872. விளம்பிய மாற்றங் கேட்ட மிக்றசு வென்னும் வீர

     னுளம்பெறு மதியின் மிக்கோ னெழுந்தியா னுவந்து சென்று

     வளம்பெறு நபிபா லேகி விரைந்திவண் வருவே னென்றா

     னளந்தறி புகழாய் செல்லென் றனுப்பினர் காபி ரெல்லாம்.

74

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்லிய சமாச்சாரத்தைக் கேள்வியுற்ற மிக்றசென்று சொல்லும் வீரனான மனதின்கண் கொண்ட அறிவினால் மேன்மைப்பட்டவன் எழும்பி யான் விரும்பிப்போய் வளத்தைப் பெற்ற நபியாகிய அந்த முகம்மதென்பவரிடத்தி லணுகி விரைவாய் இங்கே வந்து சேருவேனென்று சொன்னான். அதற்கு அந்தக் காபிர்களனைவரும் அளந்து அறிகின்ற கீர்த்தியையுடைய மிக்றசே! நீ போவாயாகவென்று சொன்னார்கள்.

 

4873. சொற்படி யவனுஞ் சென்று சுருதிநேர் நபியைக் கண்டு

     முற்பட விருந்து நல்ல மொழி பகர்ந் திருக்கும் வேளை

     பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டி னின்று

     சொற்பயின் மதியான் மிக்க சுகயிலென் றொருவன் வந்தான்.

75

      (இ-ள்) அவ்வாறு சொல்லிய சொல்லின் வண்ணம் அந்த மிக்றசென்பவனும் போய் வேதங்களெல்லாம் வேண்டுகின்ற நபியாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் செய்யிதுனா