பக்கம் எண் :

சீறாப்புராணம்

1799


இரண்டாம் பாகம்
 

4949. சொற்றசொ லனைத்தையுங் கேட்டுத் தோமற

     விற்றையி னான்குபே ரெழுமன் னோன்றனைப்

     பற்றியிவ் வுழைபுகப் படுத்து வேனென்றா

     னற்றமி னால்வரோ டவனு மெய்தினான்.

38

      (இ-ள்) அவ்வாறு சொல்லிய வார்த்தைகளெல்லாவற்றையும் அவன் கேள்வியுற்று இன்றையத் தினத்தில் உங்களில் நான்கு பேர்கள் என்னோடு குற்றமற எழுந்து வாருங்கள். அவனைப் பிடித்து இவ்விடத்தில் வந்து சேரும்படி செய்வேனென்று சொன்னான். உடனே அச்சமற்ற நான்கு காபிர்களோடு அவனுமெழும்பி அங்கே போய்ச் சேர்ந்தான்.

 

4950. ஈங்கிவ ரைவரு மெய்துங் காலையில்

     வாங்கிய சிலையினார் வாய்தி றந்துநின்

     றேங்கிய மனத்தினீ ரென்னை யாரெனத்

     தாங்கினி ரென்றனர் தவத்தின் மேலுளார்.

39

      (இ-ள்) இவ்விடத்தில் அந்த ஐந்து பேர்களும் அவ்வாறு வந்து சேர்ந்த காலத்தில் வளைந்த கோதண்டத்தையுடையவர்களும் தவத்தின் மீதுள்ளவர்களுமான அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் தங்கள் வாயைத் திறந்து நின்று அஞ்சிய இதயத்தையுடைய காபிர்களே! நீங்கள் என்னை யாவனென்று உங்கள் மனதின்கண் கொண்டீர்களென்று கேட்டார்கள்.

 

4951. கடனிலம் புரந்திட வந்த காவல

     திடமுற வறிகிலோஞ் செப்புவீ ரென்றார்

     மடமைசேர் மனத்தினர் வதன நோக்கியே

     தொடைகமழ் புயத்தினர் சொல்ல லுற்றனர்.

40

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல, அதற்கு அறியாமையைப் பொருந்திய இதயத்தையுடையவர்களான அந்தக் காபிர்கள் சமுத்திரத்தைக் கொண்ட இப்பூலோகத்தை ஆட்சி செய்யும்படி வந்த அரசரே! யாங்கள் நிச்சயமாகத் தெரிந்திலோம். அதைச் சொல்லுமென்று கேட்டார்கள். உடனே பூமாலையானது பரிமளிக்கா நிற்குந் தோள்களையுடைய அவர்கள் அவர்களது முகத்தைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

4952. அருட்கடம் பூண்டவர்க் கன்ப ராகிய

     மருக்கமழ் புயத்தசு காபி மார்களிற்

     றிருக்கறும் பெயர்சல்மா வென்னுந் தீரனியான்

     றருக்குறு மக்வகு தந்த சீயமே.

41

      (இ-ள்) யான் அருளாகிய கடத்தை யணிந்தவர்களான நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு