பக்கம் எண் :

சீறாப்புராணம்

1800


இரண்டாம் பாகம்
 

றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு நேசர்களாகிய வாசனையானது பரிமளிக்கா நிற்குந் தோள்களையுடைய அசுஹாபிமார்களிற் குற்றமற்ற சல்மா என்னும் பெயரையுடைய திண்ணியன். சௌரியத்தைப் பொருந்திய அக்வகு என்பவர் இவ்வுலகத்தின்கண் தந்த சிங்கம்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4953. குடைநிழற் கொண்டற் குள்ளே வீற்றிடுங் கொற்ற வர்க்கே

     யடிகளா வலங் கொடுத்த வாண்டவ னாணை நுங்க

     ளுடல்செறி யுயிரை யெல்லா மோட்டுவன் கணையொன் றாலே

     நடமுடைப் பரிக டாவி நடத்தினும் பிடிக்க மாட்டீர்.

42

      (இ-ள்) மேகமாகிய குடை நிழலின்கண் வீறுடனிருக்கும் அரசரான நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குத் தலைவராக வெற்றியைக் கொடுத்த ஆண்டவனான அல்லாஜல்லஜலாலகுவத்த ஆலாவின் பேரிற் சத்தியமாக உங்களது சரீரத்தின்கண் பொருந்திய பிராணன்களெல்லாவற்றையும் ஓரம்பினால் ஓடும்படி செய்வேன். நடனத்தையுடைய குதிரைகளைத் தாவி நீங்கள் நடத்திக்கொண்டு வந்தாலும் என்னைப் பிடிக்கமாட்டீர்கள்.

 

4954. இன்னலுற் லுளமி குந்த பசியினா லிடைந்த தாலே

     கன்னவில் புயத்தீர் பாவம் புண்ணியங் கருத்தி லெண்ணி

     நென்னலி லடுங்கஞ் சத்தை நுகர்ந்திட நேர்ந்தே னல்லாற்

     செந்நெல்சூழ் நகரங் காண்ப தரிதெனச் செப்பி னாரால்.

43

      (இ-ள்) மலையைப் போலும் புகழா நிற்குந் தோள்களையுடையவர்களே! நீங்கள் மனதின்கண் துன்பத்தை யடைந்து அதிகரித்த பசியினால் இடைந்ததால் யான் பாவத்தையும் புண்ணியத்தையும் மனதின்கண் சிந்தித்து முன்னை நாள் சுட்ட அப்பவருக்கங்களைச் சாப்பிடுவதற்கு உடன்பட்டேனேயல்லால் நீங்கள் வயல்கள் சூழ்ந்த உங்களது நகரங்களைப் பார்ப்பது அரிய காரிய மாகுமென்று சொன்னார்கள்.

 

கலிவிருத்தம்

 

4955. வஞ்சமும் விள்ளலும் வளரும் பாவமு

     நெஞ்சக மாட்டியே நேரு மைவரு

     மஞ்சலி லாவுரைக் கஞ்சிப் பிண்டிசேர்

     கஞ்சமுண் டார்த்திடுங் கயவர்ச் சேர்ந்தனர்.

44