|
இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல,
கபடத்தையும் வேற்றுமையையும் ஓங்கா நிற்கும்
பாதகத்தையும் மனதின்கண் பூண்டு அங்குவந்து எதிர்த்த
அந்த ஐந்து காபிர்களும் அந்தப் பயமற்ற
வார்த்தைகளுக்காகப் பயந்து மாவினாற் பொருந்திய
அப்பவருக்கங்களை யருந்தி யுறையுங் கீழ்மக்களான அந்தக்
காபிர்களைப் போய்ச் சேர்ந்தார்கள்.
4956. சிலைபொரு
தகன்றதோட் சிங்க வேறன்னார்
கலைநிலாத் தவழுங்கந் தரத்தெ ருத்தினின்
மலைவற மனமகிழ் திருக்கு மேல்வையி
னிலைபெறு மனத்தவர் செயனி கழ்த்துவாம்.
45
(இ-ள்) அவர்கள் அவ்வாறு போய்ச் சேர,
மலையையுந் தமக்கு நிகரில்லையென்று பொருதி விசாலமாகிய
தோள்களையுடைய அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு
அவர்கள் கோடச கலைகளையுமுடைய சந்திரனானது தவழா
நிற்கும் அந்த மலையினது உச்சியில் மயக்கமறும்படி
இதயமானது களிப்புற்றிருக்கின்ற சமயத்தில், நிலைபெற்ற
இதயத்தையுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபிசெய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது
முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களது செய்கையை யாம் சொல்லுவாம்.
எழுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
4957. பணித்தலை மீதிற்
கிடந்தபா ரனைத்தும்
பணிந்திட வெழுமதீ னாவின்
மணிக்குடந் துரந்த வாங்குவிற் றடந்தோள்
வயவசு காபிகள் சூழத்
துணித்திரு டுரக்குங் கதிரெழு மேனித்
தூயவ ரிருக்குங்கா லையினி
லணித்திற பாகு வந்தன ரடிக்கீழ்ப்
பணிந்தன ரகமிக மகிழ்ந்தே.
46
(இ-ள்) ஆதிசேடனது பணாமகுடத்தின்மேற்
கிடந்த இப்பூமி முழுவதும் வணங்கும் வண்ணம் ஓங்குகின்ற
திருமதீனமா நகரத்தின்கண் அந்தகாரத்தைக் கண்டித்து
ஒட்டா நிற்குஞ் சூரியனைப் போலு மோங்கிய
திருமேனியையுடைய பரிசுத்தரான நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு
றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இரத்தினக்
கும்பத்தைத் தமக்கு நிகரில்லையென்று ஒட்டிய வளைத்த
கோதண்டத்தைச் சுமந்த பெரிய தோள்களையுடைய
வீரத்தைப்
|