பக்கம் எண் :

சீறாப்புராணம்

1802


இரண்டாம் பாகம்
 

பெற்ற அசுஹாபிமார்கள் சூழும்படி இருக்கின்ற சமயத்தில், றபாகென்பவர் சமீபமாக வந்த மனமானது மிகவுஞ் சந்தோஷமடையப் பெற்று அவர்களது பாதத்தின்கண் பணிந்தார்கள்.

 

4958. இருநில மளக்கு மொருதனிச் செங்கோ

         லிறையவன் றூதினை நோக்கிப்

     பொருதிறல் கத்பான் கூட்டநாற் பதின்மர்

         புகுந்துகா பாவினை வளைந்து

     வருவிறற் றொறுவன் றலைதனை வீழ்த்தி

         யானிரை யனைத்தையும் வௌவித்

     தருதிரைக் கடல்போ லேகின ரென்று

         சாற்றினர் பவளவாய் திறந்தே.

47

      (இ-ள்) அவ்வாறு பணிந்து பெரிய இப்பூமியை அளக்கா நிற்கும் ஒப்பற்ற ஏகச் செங்கோலையுடைய கடவுளான அல்லா ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்துப் பவளத்தையொத்த தங்களது வாயைத் திறந்து பொருதும் வல்லமையையுடைய கத்துபான் கூட்டத்திலுள்ள நாற்பது காபிர்கள் வந்து காபாவென்னுந் தானத்தைச் சூழ்ந்து எங்களோடு வந்த வலிமையையுடைய இடையனது தலையை வெட்டிப் பூமியின்கண் வீழும்படி செய்து பசுக்கூட்டங்க ளெல்லாவற்றையுங் கொள்ளையிட்டு அலைகளைத் தருகின்ற சமுத்திரத்தைப் போலுஞ் சென்றார்களென்று சொன்னார்கள்.

 

4959. உலகமீக் கூறும் பெரும்புகழ்க் குரிசி

         லுள்ளகம் புழுங்கிட நக்கி

     மலையெனும் புயங்க ளினிதெழுந் தோங்க

          வருபடைக் கலனெடுத் தணிந்து

     முலைதிக ழயில்வேன் மன்னர்கள் சூழ்ந்து

          மொய்த்திடப் பரியின்மீ தேறிப்

     பலபல வியங்கண் முழங்கிட நடந்து

          போயினர் பயமழை நிழற்ற.

48

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, இவ்வுலகமானது கொண்டாட, நிற்கும் பெரிய கீர்த்தியையுடைய குரிசிலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனதினுள் வெப்ப