பக்கம் எண் :

சீறாப்புராணம்

1803


இரண்டாம் பாகம்
 

முறும்படிச் சிரித்து மலையென்று சொல்லுந் தோள்கள் இனிமையோடு மெழுந்து ஓங்கும் வண்ணம் வந்த யுத்தாயுதங்களை எடுத்துத் தரித்து வெற்றியானது விளங்கப் பெற்ற அயிலையும் வேலையுமுடைய அரசர்களான அசுஹாபிமார்கள் வளைந்து மொய்க்கும்படிக் குதிரையின் மீது ஏறி நீரைக் கொண்ட மேகமானது குடையாக நிழலைச் செய்யவும், பற்பல வாத்தியங்களொலிக்கவும் நடந்து போனார்கள்.

 

4960. ஏடலர் மாலை புயங்கிடந் திலங்க

         வெழினபி சகுதினை நோக்கித்

     தேடரும் பரியு நீருமுன் னணியாய்த்

         திரண்டெழுந் தொல்லையிற் சென்று

     கோடுகொண் டெழுந்த நெடுவரைக் குடுமி

         யிடங்களும் பலபல குறுகி

     நேடிய நிரைக ளனைத்தையு மீட்டு

         வம்மென நிகழ்த்தின ரன்றே.

49

      (இ-ள்) அவ்வாறு போன அழகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இதழ்களைக் கொண்ட புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையானது தோள்களிற் கிடந்து பிரகாசிக்கும்படி சகுது றலியல்லாகு அன்கு அவர்களைப் பார்த்துத் தேடுதற் கருமையான குதிரைப் படையும் நீரும் முன்னணியாக ஒன்று சேர்ந்தெழும்பி விரைவிற் போய்ச் சிகரங்களைக் கொண்டு எழும்பிய நெடிய மலையினது குடுமியாகிய பற்பல இடங்களையுமடுத்து நாம் தேடிய பசுக் கூட்டங்க ளெல்லாவற்றையுந் திருப்பிக் கொண்டு வாருங்களென்று கட்டளை செய்தார்கள்.

 

4961. கடல்கொளக் குறைந்த கண்ணகன் ஞாலங்

          காத்திடு முகம்மதைப் போற்றிப்

     படவர வுலக மிடிபடத் தாவும்

          பரிகளுந் தானையுஞ் செறிய

     வடல்செறி வீரர் சகுதுவெம் பரியை

          நடத்தின ரதற்குமுன் விரைந்து

     வடவரை பிதிர்ந்து தூளெழுத் தாவும்

          வாம்பரி அகுசம்போ யினரால்.

50

      (இ-ள்) அவ்வாறு கட்டளை செய்ய, வெற்றியானது நெருங்கப் பெற்ற வீரரான அந்தச் சகுது றலியல்லாகு அன்கு அவர்கள் சமுத்திரமானது கொள்ள, அதனாற் குறைந்த விசாலமாகிய இப்பூமியைக் காக்கும் நமது நாயகம் நபிகட்