|
இரண்டாம்
பாகம்
பெருமானார்
நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல்
அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் துதித்துப்
படத்தைக் கொண்ட ஆதிசேடனால் தாங்கப்பட்ட
இவ்வுலகமானது இடிபடும் வண்ணந் தாவா நிற்குங் குதிரைகளுஞ்
சைனியங்களுந் தங்களை நெருங்கி வரும்படித் தங்களது
வெவ்விய குதிரையை நடத்தினார்கள். அதற்கு முன் வேகமாய்
மகாமேருப் பருவதமுஞ் சிதறித் தூசியாக எழும்பும் வண்ணந்
தாவா நிற்கும் பாய்கின்ற குதிரையையுடைய அகுசம்
றலியல்லாகு அன்கு அவர்கள் போனார்கள்.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
4962. கலியிரு ளுடைத்த
வேற்கைக் காவலர் சல்மா வென்போ
ரலையென வரும்ப தாதி கண்டுபின் னார பாரித்
துலைவற மனம கிழ்ந்தா ரொண்டிற லகுச மென்னும்
புலியதி ருருமிற் சீறி யெய்தினர் புயங்க ளோங்க.
51
(இ-ள்) அவ்வாறு போக, போராகிய
அந்தகாரத்தைத் தகர்த்த வேலாயுதத்தைத் தாங்கிய
கையையுடைய அரசரான அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு என்று
சொல்லப்பட்டவர் சமுத்திரத்தைப் போலும் வரா
நிற்குஞ் சைனியத்தைப் பார்த்துப் பின்னர்
மிகவுமுழங்கி அச்சமறும் வண்ணம் உள்ளமானது
சந்தோஷிக்கப் பெற்றார்கள். ஒள்ளிய வலிமையை யுடைய
அகுசம் றலியல்லாகு அன்கு என்று சொல்லும் புலியானவர்
முழங்கா நிற்கும் இடியைப் போலுங் கர்ச்சித்து
இருதோள்களு மோங்கும்படி வந்து சேர்ந்தார்கள்.
4963. அரிகண்மேற்
றூசி போட்டங் கடவெழும் போதில் சல்மா
வரிபொரு வயமா வென்ன மகிழ்ந்தெழுந் தோடி வந்து
பரியினைப் பிடித்துக் கொண்டு பற்றலர் மீதிற் சென்றே
யொருவரா வடர்ந்து புக்குற் றுடற்றுத லரிய தாமால்.
52
(இ-ள்) அவ்வாறு வந்து சத்துராதிகளாகிய
காபிர்கள் மீது தூசி போட்டு அங்கே பொருதும்படி
யெழும்புஞ் சமயத்தில், இரேகைகள் பொருந்திய புலியைப்
போலுஞ் சந்தோஷித்து எழும்பி ஓடி வந்து அவர்களது
குதிரையைப் பிடித்துக் கொண்டு சத்துராதிகள் மீதில்
ஒருவராய்ப் போய் நெருங்கிப் புகுந்திருந்து யுத்தஞ்
செய்வது அரியதாகும்.
4964. புனைமயிர்ப் புரவி
மீதிற் போந்திடு மள்ளர் தம்மிற்
கனைகழல் வீரர் மிக்குக் கணிப்பில ரதனி னாலே
யனையவ ரிடத்திற் சேற லன்றென வுரைத்த தென்றார்
நனைமலர் செறிந்த திண்டோ
ணரபதி யுளம கிழ்ந்தே.
53
|