பக்கம் எண் :

சீறாப்புராணம்

1805


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அலங்கரித்த புறமயிரைக் கொண்ட குதிரைகளின் மேற் போகும் வீரர்களில் ஒலிக்கின்ற வீரக்கழலைத் தரித்த வீரர்கள் மிகவும் கணிப்பில்லாதவர்கள். ஆதலினால் அத்தன்மையையுடைய காபிர்களிடத்திற் போகுதல் நல்லதல்லவென்று சொன்னதென்று மனமானது மகிழ்ச்சி யடைந்து தேனைக் கொண்ட புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையானது நெருங்கிய திண்ணிய தோள்களையுடைய அரசரான அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் சொன்னார்கள்.

 

4965. அடுசமர்க் கிடியே றன்ன வடல்சல்மா வதன நோக்கி

     நடுநிலை நின்ற நாய னாணைநீர் விலக்க லன்றேன்

     றிடுகழ லகுச மென்போ ரியம்பிட வதனைக் கேட்டு

     வடிவுடை வேற்கை வீரர் வாசியை விட்டா ரன்றே.

54

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல, வீரக்கழலைத் தரித்த அந்த அகுசம் றலியல்லாகு அன்கு அவர்கள் கொல்லா நிற்கும் யுத்தத்திற்கு இடியேற்றைப் போன்ற வலிமையையுடைய அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்களது முகத்தைப் பார்த்து நீதியாக நின்ற நாயனான அல்லா ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் பேரிற் சத்தியமாக நீங்கள் என்னை மறிப்பது நல்லதல்லவென்று சொல்ல, அதை அழகையுடைய வேலாயுதத்தைத் தாங்கிய கையைப் பெற்ற வீரரான அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் கேள்வியுற்று அக் குதிரையை விட்டார்கள்.

 

கலிவிருத்தம்

 

4966. கூற்றொடு பொருதிறற் கொற்ற வீரர்மேல்

     காற்றெனச் சுழலும்வாம் பரிக டாவிவந்

     தேற்றுரு மெனச்சம ரியையுங் காலையிற்

     சாற்றபு துற்றகு மானுஞ் சார்ந்தனன்.

55

      (இ-ள்) அவ்வாறு விட, அவர்கள் எமனோடும் பொருதும் வல்லமையையும் விஜயத்தையுமுடைய வீரரான அந்தக் காபிர்கள் மீது காற்றைப் போலுஞ் சுழலா நிற்கும் பாய்கின்ற குதிரையைச் செலுத்தி வந்து இடியேற்றைப் போலும் போரிற் பொருந்துகின்ற சமயத்தில், யாவரும் புகழ்கின்ற அப்துர் ரஹ்மானென்பவனும் வந்து சேர்ந்தான்.

 

4967. வடவரை துகளெழ நடத்தும் வாம்பரி

     புடையினிற் செறிந்திடப் பொடிப டுந்துகட்

     படலையிற் கதிரவன் மறையப் பாரரா

     வுடனெளி நெளியவந் துருமிற் சீறினான்.

56