|
இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவ்வாறு வந்த அவன் மகாமேருப்
பருவதமானது தூசியாக எழும்பும்படி நடத்தா நிற்கும்
தாவுகின்ற குதிரையானது பக்கத்தில் நெருங்கவும்,
பொடிபடுந் தூசியாகிய கதவிற் சூரியனானவன் மறையவும்,
கருமையான ஆதிசேடனானது தனது சரீரத்தை மிகவும்
நெளிக்கவும் வந்து இடியைப் போலுங் கர்ச்சித்தான்.
4968. சீறிவாய்
மடித்திதழ் கவ்விச் செங்கர
மூறெழப் பிசைந்துவா ளோங்கி வீசினா
னேறரி யெனவரு மகுச மென்பவர்
வீறெழ வாளினா லொட்டி வீசினார்.
57
(இ-ள்) அவ்வாறு கர்ச்சித்து அதரங்களை
மடித்து வாயாற் கடித்துச் சிவந்த கையைக்
காயமுண்டாகும்படிப் பிசைந்து வாளாயுதத்தால் ஓங்கி
வீசினான். அதை ஆண் சிங்கத்தைப் போலும் வந்த அந்த
அகுசம் றலியல்லாகு அன்கு என்பவர்கள் பெருமையானது
ஓங்கும் வண்ணம் தங்களது வாளாயுதத்தினாலொட்டி
வீசினார்கள்.
4969. வீசலுங் கிடுகினா
லெற்றி விட்டெழுந்
தாசையுந் திசைகளு மதிர வார்த்திடுந்
தூசியை நடத்தினன் சுற்றி வாளெறிந்
தேசின னவையக னிகலுஞ் சிந்தையான்.
58
(இ-ள்) அவ்வாறு வீசின அளவில், குற்றமும்
பாவமும் மாறுபடும் மனத்தையுடையவனான அந்த
அப்துர்றஹ்மானென்பவன் அதைத் தனது கேடகத்தினால் தட்டி
விட்டு எழும்பி நான்குதிக்கும் எண்டிசையும் அதிரும்
வண்ணம் முழங்கா நிற்குந் தனது குதிரையைச் சுற்றி நடத்தி
வாளால் ஏசி வீசினான்.
4970. வட்டவொண்
கிடுகினாற் றாங்கி மனனவர்
விட்டனர் தண்டமொன் றேந்தி வீழ்ந்திடத்
தட்டல கதனினாற் றாங்கி வெய்யவன்
மட்டறும் படைகளியா வையும்வ ழங்கினான்.
59
(இ-ள்) அவ்வாறு வீச, அரசரான அந்த அகுசம்
றலியல்லாகு அன்கு அவர்கள் அதை வட்ட வடிவைக் கொண்ட
ஒள்ளிய தங்களது கேடகத்தினால் தாங்கி அவன் பூமியில்
விழும் வண்ணம் ஒரு தண்டாயுதத்தை யேந்தி அவன் மீது
விட்டார்கள். உடனே கொடியோனாகிய அவன் அதைத் தனது
பரிசையாகிய ஆயுதத்தினால் தாங்கித் தனது எல்லையற்ற
ஆயுதங்களெல்லாவற்றையும் வழங்கினான்.
|