|
முதற்பாகம்
பரிசுத்தஞ் செய்து நீங்காது ஆராய நின்ற
நற்கருத்து நல்லீமான் நல்லறிவு முதலியவைகளை அதனுள்
நிறையும்படி செய்தார்கள்.
419. உண்மையு நினைவுஞ் சேர்த்தி யூறிலா துறப்பொ
ருத்தி
வண்மைசேர் முகம்ம
தின்றண் மணிப்பிடர்த் தணிவ தாகத்
திண்மைகொள்
புயமி ரண்டிற் றெரிதர நடுவிற் றூய
வொண்ணிறப் புறவி
னண்டத் தோதிய வளவ தாக.
29
(இ-ள்)
அந்தப்படி யுண்மையையும் நினைவையும் அதிற்
சேர்மானமாக்கிப் பொருந்தும்படி தழும்பில்லாது
பொருத்தி அழகு தங்கிய நபி முகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களின் குளிர்ச்சியுற்ற நன்மையையுடைய
பிடரின் கீழாகவும் வலிமைகொண்ட இரண்டு தோள்களுக்கும்
நடுவாகவும் யாவர்கட்குந் தோற்றும்படி பரிசுத்தமான
ஒள்ளிய நிறத்தையுடைய புறாவின் முட்டையினது
பிரமாணமென்று சொல்லிய அளவாகவும்.
420. முத்திரை யென்னு மவ்வி லாஞ்சனை தரித்து மூவா
வுத்தமர் தெரிந்து
நோக்கி யொருவருக் கொருவர் சொல்வா
ரித்தகைக் குரிசி
னின்ற நிறையிடை கண்டோ ரெல்லாம்
பத்திவிட்
டொளிருஞ் சொர்க்கப் பலன்பதம் பெறுவ ரென்றே.
30
(இ-ள்)
முத்திரையென்று சொல்லும் அவ்விலாஞ்சனைத் தரித்துக்
கெடாத மேன்மையை யுடையவர்களான ஜிபுரீல்
அலைகிஸ்ஸலாமவர்களும், மீக்காயில் அலைகிஸ்ஸலா
மவர்களும், இவ்விலாஞ்சனையினது தகமையுடைய பெருமையிற்
சிறந்த நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள்
நின்ற நிறையினது பாரத்தைப் பார்த்தவர்களெல்லாவரும்
வரிசைவிட்டு ஒளிராநிற்கும் பொன்னுலகத்தினது
பிரயோசனத்தையும் பதவியையும் அடைவார்களென்று
அந்நபிகணாயக மவர்களைப் பார்த்து உணர்ந்து
ஒருவருக்கொருவர் தம்மிற்பேசிக் கொள்ளுவார்கள்.
421. தரம்பெறு மாயி ரம்பேர் நிறையெனச் சாற்றிப்
பத்தா
யிரம்பெயர்
நிறையுண் டென்ன வியம்பிநூ றாயி ரம்பேர்க்
குரம்பெறக் கனமுண்
டென்ன வோதியோர் கோடி கோடி
நிரம்புமா னிடருக்
குற்ற நிறையென்று நிகழ்த்தி னாரே.
31
(இ-ள்)
அன்றியும், அவ்விலாஞ்சனையினது காரணத்தால் நபிமுஹம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் நிறையானது தகுதி
பொருந்திய ஆயிரம் மனிதர்களின் நிறையாகுமென்று
சொல்லி மாறிப்பதினாயிரம் மனிதர்களின்
|