பக்கம் எண் :

சீறாப்புராணம்

181


முதற்பாகம்
 

நிறையுண்டுமென்று சொல்லிப் பின்னுமாறி வலிமைபெற இலட்சம் மனிதர்களின் நிறையுண்டுமென்று சொல்லி ஒப்பற்ற கோடானு கோடியாகப் பரவிய மனிதர்களுக்குற்ற நிறையாகு மென்றும் சொன்னார்கள்.

 

422. வகுத்தநாட் டொடுத்துப் பின்னாள் வருவதோர் நாளீ றாகத்

    தொகுத்தவச் சனங்க ளெல்லா மிவரெடை தோன்றா தென்னப்

    பகுத்தவர் பார்த்துப் பாரிற் படைப்புள சனங்க ளெல்லா

    மிகத்திவர் சபாஅத் தாலீடேறுவ ரென்றுஞ் சொன்னார்.

32

     (இ-ள்) மேலும் ஆதியில் அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் வகுத்த நாள் தொடங்கிப் பிற்காலம் வராநின்ற வொப்பற்ற கியாமநாள் கடைசியாக அளவுபடுத்தப்பட்ட அம்மனிதர்கள் யாவர்களும் இந்த நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் நிறைக்கு ஒப்பாகத் தோன்ற மாட்டார்களென்று பிரித்து அவ்விருவர்களும் தம்மிற் பார்த்துக் கொண்டு இந்நபிகள் பெருமானவர்களின் ஷபாஅத்தினால் பூமியின்கண் படைப்புள்ள ஜனங்கள் யாவர்களும் ஈடேற்றம் பெறுவார்களென்றுஞ் சொன்னார்கள்.

 

423. அதிசயித் துரைத்து நின்றங் ககுமது சிரசைத் தொட்டுத்

    துதிசெய்து முத்த மிட்டுத் தூயவன் றோழ ரான

    புதியதோர் கபீபுல் லாவென் றோதிய பேரும் போர்த்து

    மதிமகிழ்ந் துவகை பொங்கி வானவர் வாழ்த்திச் சொல்வார்.

33

     (இ-ள்) அவ்வாறாக அவ்விருவர்களும் அவ்விடத்தில் நின்று அதிசய முற்றுக்கூறி அஹ்மது என்று சொல்லாநிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் தலையைத் தொட்டுப் புகழ்ந்து முத்தமிட்டுப் பரிசுத்தமாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் நேசரான அர்த்தத்தை விளக்கும் நூதனமாகிய ஹபீபுல்லா என்று சொல்லும் ஒரு திருநாமத்தையும் அவர்களுக்குப் போரத்துப் புத்தியில் மகிழ்ச்சியடைந்து உவகையானது அதிகரித்து ஆசீர்வதித்துச் சொல்லுவார்கள்.

 

424. அருமறை முகம்ம தேநும் மகத்தினி லஞ்சல் வேண்டாம்

    வரமுறு புதுமை நும்பால் வருவதுண் டனேக மந்தத்

    தரமறிந் துவகை யெய்து முமக்கெனச் சாற்றிப் போற்றிப்

    பெரியவ னருளால் வானோர் பேருல கடைந்தா ரன்றே.

34

     (இ-ள்) தேவர்களான அவ்விருவர்களும் நபிநாயகமவர்களைப் பார்த்து அரிதான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய முகம்மதுவே! நீர் உமது மனசின்கண் பயப்பட வேண்டாம். மேன்மை தங்கிய