|
இரண்டாம்
பாகம்
4981. தெள்ளிய விறன்மனச்
சிங்க வேறனார்
எள்ளரு மிடைவையி னிருத்த றீதென
விள்ளரு மனத்தொடு மீளு மெல்வையி
னள்ளிலை வேலினா மிறுவந் தாரரோ.
70
(இ-ள்) அவ்வாறு பிடித்துத் தெள்ளிய
வீரத்தைக் கொண்ட மனத்தையுடைய ஆண் சிங்கத்தைப்
போன்ற அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள்
நிந்தையற்ற அவ்விடைவையின்கண் இருப்பது குற்றமென்று
சொல்லுதற்கருமையான இதயத்தோடுந் திரும்பி வருகின்ற
சமயத்தில், மாமிசத்தை யள்ளிக் கொள்ளும்
வேலாயுதத்தையுடையவர்களான ஆமிறுறலியல்லாகு அன்கு
அவர்கள் அங்கே வந்தார்கள்.
4982. சிறியதந் தையரெனுஞ்
செம்ம லன்புட
னறைபயத் துருத்தியொன் றன்றி நானிலத்
துறவியி லூறுநீர்த் துருத்தி யொன்றுமா
நிறைவுறக் கொடுத்தன ருரிய நீர்மையால்.
71
(இ-ள்) அவ்வாறு வந்த சிறிய பிதாவென்று
சொல்லும் அரசரானவர்கள் அன்போடுஞ் சொல்லா நிற்கும்
ஒரு நீர்த்துருத்தியேயல்லாமல் நான்கு வகைப்பட்ட
இப்பூமியின்கண் கிணறுகளிற் சுரக்கும் நீரைக் கொண்ட
ஒரு துருத்தியும் மிகவும் உரிமையான குணத்தினால் நிறையும்
வண்ணங் கொடுத்தார்கள்.
4983. ஆன்றிரு
கரத்தின் ராமி றன்புற
வூன்றிய சலிலத்தி னுலுவுஞ் செய்துபின்
றேன்றரு பயசினைச் சிறப்பி னுண்டனர்
மான்றிகழ் புயசல்மா வென்னு மன்னரே.
72
(இ-ள்) மாட்சிமைப்பட்ட இரு
கைகளையுடையவர்களான அந்த ஆமிறுறலியல்லாகு அன்கு
அவர்கள் அன்பானது பொருந்தும் வண்ணம் அவ்வாறு ஊன்றிய
அந்த நீரில் உருவமானது விளங்குகின்ற தோள்களையுடைய
அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு என்று சொல்லும்
அரசரவர்கள் உலுவுஞ் செய்து அப்பால் வாசனையைத்
தருகின்ற அந்த நீரைச் சிறப்போடு மருந்தினார்கள்.
கலிநிலைத்துறை
4984. மால ளித்திடும்
பசியினைப் போக்கிமாற் றலரோ
டோல மிட்டெதி ருடன்றிடு முவளக்கத் துழையிற்
சீல முற்றவர் வந்தனர் வந்தனர் திருச்செங்
கோலு யர்த்திமண் ணிலம்புரந் தளித்திடுங் கோமான்.
73
|