பக்கம் எண் :

சீறாப்புராணம்

1813


இரண்டாம் பாகம்
 

பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது முகத்தைப் போலுந் தோற்றமாயிற்று.

 

4989. முயலடை கிடக்கும் பானிலா மதிமுன்

         னீரகட் டிடையுதித் துலவிப்

     புயல்செறிந் தேகா வியோமமீ தெழுந்தான்

         புடையுடுக் கணம்பல மிளிரக்

     கயவுடைக் கமலந் திளைத்திடும் படுகாக்

         கடையினிற் கலித்தெழும் வனசஞ்

     செயிருறக் குவியப் பானலம் விரியத்

         திகழ்ந்ததந் தரத்திடை செறிந்தே.

78

      (இ-ள்) முயலானது அடையாகக் கிடக்கும் பால்போலுங் கிரணங்களையுடைய சந்திரனானது அவ்வாறு சமுத்திரத்தினிடத்துத் தோன்றி யுலாவி மேகங்கள் நெருங்கியகலாத ஆகாயத்தின் மீது எழும்பிப் பல நட்சத்திரக் கூட்டங்கள் பக்கத்திற் பிரகாசிக்கவும், செழுமையையுடைய நீரானது திளைத்திடும் பெரிய சோலைகளின் புறத்துத் தழைத்து ஓங்கிய தாமரை மலர்கள் குற்றமுறும் வண்ணங் குவியவும், கருங்குவளைமலர்கள் மலரவும் அந்தரத்தின்கண் நெருங்கிப் பிரகாசித்தது.

 

4990. மாற்றல ரஞ்ச விறல்புரி சல்மா

         வவ்விமுன் கொணர்ந்தவை தன்னி

     லூற்றமிக் குளதோ ரொட்டகை யதனை

         யுவப்பொடு பிலாலினி தறுத்துத்

     தோற்றிய வீரற் றிணிபிடர்த் தசைகள்

         சுட்டினி தளித்தனர் புகழி

     னாற்றல்சால் வரிசை நபிநயி னாரு

         மருந்தின ரகமிக மகிழ்ந்தார்.

79

      (இ-ள்) அவ்வாறு பிரகாசிக்க, சத்துராதிகளாகிய காபிர்கள் பயப்படும் வண்ணம் யுத்தஞ் செய்கின்ற அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் ஆதியிற் சத்துராதிகளிடத்திருந்து பிடித்துக் கொண்டு வந்தவற்றில் மிகவும் வலிமையையுடைய ஓரொட்டகத்தைப் பிலால் றலியல்லாகு அன்கு அவர்கள் மகிழ்ச்சியோடும் அறுத்து அதனிடத்துண்டான ஈரலையும் திண்மையான புறங்கழுத்தினது மாமிசங்களையும் நெருப்பினாற் சுட்டு இனிமையோடுங் கொடுத்தார்கள். அவற்றைக் கீர்த்தியின் வலிமையானது அதிகரிக்கப் பெற்ற சிறப்பை யுடைய நயினாரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல்