|
இரண்டாம்
பாகம்
முறுசலீன்
ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
வாங்கியுண்டு இதயமானது மிகவுங் களிப்படையப்
பெற்றார்கள்.
4991. மற்றுள
தெவையும் பலபல விதத்திற்
சமைத்தனர் மனமுற வருந்தித்
துற்றிய மகிழ்வி னியாவரு மிருந்தார்
துதிதரு முகம்மது நயினார்
நற்றுறை விளக்கு மெழின்முக நோக்கி
நனிபுக ழாரணக் கடலே
கற்றவர்க் காக்கந் தரும்பெருந் தவமே
யென்றெதிர் கழறுவர் சல்மா.
80
(இ-ள்) அவர்கள் அவ்வாறு களிப்படைய,
வேறிருந்த அவ்வொட்டகையினது மாமிசங்க
ளெல்லாவற்றையும் பற்பல விதமாய்ச் சமைத்து அனைவரும்
இதயமானது பொருந்தும் வண்ணஞ் சாப்பிட்டு நிறைந்த
சந்தோஷத்தோடு மிருந்தார்கள். சல்மா றலியல்லாகு
அன்கு அவர்கள் கீர்த்தியைத் தரா நிற்கும் நயினாரான
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது
முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களது நன்மை பொருந்திய மார்க்கத்தை விளக்கா
நிற்கும் அழகிய வதனத்தைப் பார்த்து மிகுந்த
கீர்த்தியையுடைய வேதசமுத்திரமே! படித்த
அறிஞர்களுக்குச் செல்வத்தை யருளும் பெரிய தவமே! என்று
எதிராய்ச் சொல்லுவார்கள்.
கலிவிருத்தம்
4992. மாண்டலி
லமரரும் வாவும் வாசியுஞ்
சேண்டனி லிறத்தலி லிறந்த காவத
மாண்டகை யாறுண்டோ ரகலுட் சேர்ந்தனர்
பாண்டரு மளியினம் படரு மாலையீர்.
81
(இ-ள்) கீதத்தை யருளா நிற்கும் வண்டுக்
கூட்டங்கள் பரவும் மாலையையுடைய நபிகட் பெருமானே!
மாட்சிமையற்ற சத்துராதிகளான காபிர்களும் அவர்க
ளேறியிருந்த தாவாநிற்குங் குதிரைகளும் இறத்தலின்றிக்
கடந்த காதவழி தூரமாகிய அவ்விடத்தில் எழுந்த
ஓராறிருக்கின்றது அதன் பக்கத்திலுள்ள நாட்டினிடத்துப்
போய்ச் சேர்ந்தார்கள்.
4993. திசைக்களி
றெருத்தில்வீற் றிருக்குஞ் சேயிழைக்
கிசைக்கல னெனவரு மதீனத் தின்னுறைக்
குசைப்பரிக் கொற்றவ நூறு பேருட
னிசைத்தெனை விட்டிரா லவர்பின் னேகியே.
82
|