|
இரண்டாம்
பாகம்
(இ-ள்) திக்கு யானைகளின் பிடரின்கண்
வீறுடனிருக்கும் பூமியாகிய பெண்ணிற்குக் கீர்த்தியைக்
கொண்ட ஆபரணத்தைப் போலும், வந்த திருமதீனமா
நகரத்தின்கண் இனிமையோடுந் தங்கிய புறமயிரைக்
கொண்ட குதிரையையுடைய அரசராகிய நபிகட் பெருமானே!
என்னை நூறு அசுகாபிமார்களோடு சொல்லி யனுப்புவீர்களே
யானால் நான் அக்காபிர்களுக்குப் பின்னாற்சென்று.
4994. வல்லையிற்
சென்றுபோய் வளைந்து மாற்றலர்
பல்லணப் பரிகளிப் படியில் வீழ்ந்திடக்
கொல்லுலை வேலினாற் கோறல் செய்தியா
னொல்லையி லடைகுவ னுண்மை யீதென்றார்.
83
(இ-ள்) வேகமாய்ச் சென்று போய் யான்
அவர்களைச் சூழ்ந்து சத்துராதிகளாகிய அவர்களது
சேணத்தைக் கொண்ட குதிரைகள் மாண்டு இப்பூமியின்கண்
விழும் வண்ணம் கொல்லனது உலையிற் செய்த
வேலாயுதத்தினால் அவர்களைக் கொன்று விரைவில் இங்கு
வந்து சேர்வேன். இது சத்தியமென்று சொன்னார்கள்.
4995. மறைவளம்
பழுத்தநா வள்ளல் வாலெயி
றிறையொளி யிருளற விலங்க மூரல்செய்
துறுபரி வீரர்மேற் சேறி யோவென
வறைதர விறல்சல்மா வழகிதெற் கென்றார்.
84
(இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல,
புறுக்கானுல் அலீமென்னும் வேதவளமானது கனிந்த நாவையுடைய
வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் வெண்மையான பற்களினிடத்துத்
தங்கிய பிரகாசமானது அந்தகார மறும்படி பிரகாசிக்கச்
சிரித்து மிகுத்த குதிரைகளையுடைய வீரர்களான அந்தச்
சத்துராதிகள் மீது நீவிர் போவீரோ? என்று கேட்க,
வலிமையையுடைய அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள்
இது எனக்கு அழகான காரியமென்று சொன்னார்கள்.
4996. சொற்றிடு
முறையினைக் கேட்டுத் தூய்மையி
னற்றவ முடைமையாய் நன்று நன்றுநின்
வெற்றியும் வீரமும் விளம்ப ரீதென
முற்றிய தவத்தினர் மொழிந்திட் டாரரோ.
85
(இ-ள்) அவ்வாறு சொல்லிய ஒழுங்கைக்
கொண்ட வார்த்தையை முதிர்ந்த தவத்தையுடையவர்களான
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா
செய்யிதுல் குறைஷிய்யா
|