பக்கம் எண் :

சீறாப்புராணம்

1816


இரண்டாம் பாகம்
 

காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேள்வியுற்றுப் பரிசுத்தமான நல்ல தவத்தையுடைய சல்மாவே! நல்லது! நல்லது!! உமது விஜயமும் வலிமையுஞ் சொல்லுவதற்கு அருமையானவையென்று சொன்னார்கள்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4997. கோரவாம் பரிமேற் செல்லுங் கொற்றவர் தம்மின் மிக்க

     வீரரா மபூகு தாதா விறலுடை வயவர் தம்மிற்

     றாருடை சல்மா வென்னுந் தலைவரிவ் விருவர்க் கொப்பாப்

     பாரினி லில்லை யென்று பகர்ந்தனர் முகம்ம தன்றே.

86

      (இ-ள்) அன்றியும், நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கடுமையைக் கொண்ட தாவிச் செல்லுங் குதிரையின் மீது போகும் அரசர்களான அசுஹாபிமார்களுள் மிகவும் வீரராகிய அபூகுதாதா, வலிமையையுடைய வீரர்களான அசுஹாபிமார்களுள் வெற்றி மாலையைத் தரித்த சல்மா றலியல்லாகு அன்கு என்று சொல்லும் தலைவர்களான இந்த இரண்டு பேர்களுக்குஞ் சமமாய் இப்பூமியின்கண் வேறொருவரு மில்லரென்று சொன்னார்கள்.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4998. சேனையும் பரியின் மன்னருந் திண்டோட்

          செம்மலுந் துயின்றனர் செறிந்த

     மாநில மீதி லுதித்தபல் லுயிருந்

          துயின்றிட வெழுபரி வாவிப்

     பானுவிண் ணேகத் திரைக்கட லுடுத்த

          பார்மகள் விழித்தனள் விழித்துக் 

     கோனெறி தவறாக் குரிசிலு மெழுந்தார்

          குரைகடற் சேனையு மெழுந்த.

87

      (இ-ள்) அவ்வாறு சொல்லிச் சைனியங்களுங் குதிரைகளின் அரசர்களான அசுஹாபிமார்களும் திண்ணிய புயங்களையுடைய எப்பொருட்கும் இறைவரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் நெருங்கிய பெருமை பொருந்திய இவ்வுலகத்தின்கண் தோன்றிய பல ஜீவராசிகளும் நித்திரை செய்யும் வண்ணம் நித்திரை செய்தார்கள். சூரியனானவன் தனது ஏழு குதிரைகளையுந் தாவிச் செல்லச் செய்து ஆகாயத்தின்கண்