பக்கம் எண் :

சீறாப்புராணம்

1818


இரண்டாம் பாகம்
 

5001. உய்வண்ண மறியாக் காபி ருரம்பறை கொட்ட வார்த்துப்

     பெய்முகி லிடித்த தென்னப் பேரிகை முழங்கி யோங்க

     வையக மடந்தை யேறு மதகளி றெருத்தஞ் சாயக்

     கொய்சுவற் பரிகள் செல்ல நடந்தது பதாதிக் கூட்டம்.

90

      (இ-ள்) அவ்வாறு பரிமளிக்க சைனியக் கூட்டமானது உச்சீவிக்குந் தன்மையை யுணராத காபிர்களது நெஞ்சமானது பறைகொட்டும்படி மழையைப் பொழிகின்ற மேகமானது ஒலித்து இடித்தாற் போலும் பேரிகையானது முழங்கியோங்கவும், இப்பூமியாகிய பெண்ணானவள் ஏறா நிற்கும் மதத்தைக் கொண்ட யானைகளின் எருத்தங்கள் சாயவும், கொய்து கட்டிய புறமயிரையுடைய குதிரைகள் நடந்து வரவும் நடந்து சென்றது.

 

5002. பணைமருப் பிரட்டை வேழப் பகடுதொண் டலத்தி னீண்ட

     கணியருப் படை முறித்துக் கயமுனித் திரளுக் கீந்துப்

     பிணையினை யணைத்துச் சென்று பிலம்படு நிகுஞ்சம் வீழ்த்தி

     யணைவுறப் புணருஞ் சார லருவரை யிடமுங் கண்டார்.

91

      (இ-ள்) அவ்வாறு சென்று பருத்த இருகொம்புகளையுடைய ஆண் யானைகள் தங்கள் துதிக்கைகளினால் நீட்சியுற்ற வேங்கை மரத்தினது புஷ்பங்களையும் இலைகளையுமுடைய பணறுகளை யொடித்து யானைக் கன்றாகிய கூட்டங்களுக்குக் கொடுத்துப் பெட்டை யானைகளைத் தழுவிப் போய் மலைக்குகைகளிற் பொருந்திய பள்ளங்களில் வீழ்த்தி அணைவுறும்படி புணராநிற்குஞ் சாரலைக் கொண்ட அருமையான மலைகளினது தானங்களையுங் கண்டார்கள்.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

5003. அலங்குளை யுரல்வாய்க் கவையடிக் கேழ

         லருவிநீ ராடிடு மிடமும்

     வலம்பட வெழுந்த நெடுமயிர்க் கவரிப்

         பிணாமடுச் சுரைதிறந் தமுத

     நிலம்படத் தாரத் தகடென விளங்கு

         நெடுவரை யிடங்களுங் குறுகிச்

     சலம்புரி மந்தி தாவறி யாத

          தருவிடங் களும்பல கடந்தார்.

92

      (இ-ள்) அன்றியும், அசையா நிற்கும் புறமயிரையும், உரலைப் போன்ற வாயையும், பிளப்பைக் கொண்ட பாதங்களையுமுடைய பன்றிகள் அருவிச் சலத்தில் ஸ்நானஞ் செய்யு மிடங்களையும், வலமாகப் பொருந்தும் வண்ண மெழும்பிய நீண்ட உரோமங்களையுடைய பெட்டைக் கவரிகளின்