பக்கம் எண் :

சீறாப்புராணம்

1819


இரண்டாம் பாகம்
 

முலைத்துவாரங்கள் திறந்து பாலானது பூமியின்கண் சிந்த, அது தாரத் தகட்டைப் போல் விளங்கா நிற்கும் நெடிய மலைகளினிடங்களையுங் கிட்டித் தணியாத கோபத்தைச் செய்கின்ற குரங்குகள் தாவிப் பாயவறியாத பல சோலையி னிடங்களையுந் தாண்டிச் சென்றார்கள்.

 

5004. கலைகறித் தருந்து மௌவலுங் குருந்துங்

         கடுக்கையுஞ் செறிந்திடு நிழற்கீழ்

     நிலைபெறா தலையு நெற்றிவெண் சுட்டிக்

         குருளையு நெருனலீன் றுலவு

     முலைமறாப் பறழும் புனிற்றிளங் கன்று

         மோட்டிள மேதியுங் கமஞ்சூ

     லலைவுறக் கிடந்து மறிந்துளைந் தலறு

         மானினம் பலவுங்கண் டனரால்.

93

      (இ-ள்) அன்றியும், ஆண் மான்கள் பற்களால் மென்று தின்னும் வனமல்லிகைகளும் காட்டெலுமிச்சைகளும் கொன்றை மரங்களும் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கும் நிழலின்கண் நிலை பெறாமல் அலைந்து திரியும் நெற்றியின்கண் வெள்ளிய சுட்டியையுடைய குட்டிகளையும், முன்னை நாளிற் பெற்று உலவா நிற்குந் தாயினது முலைப்பாலை மறவாத சிறு குட்டிகளையும் மிகவும் இளமையையுடைய கன்றுகளையும், இளம் பருவத்தைக் கொண்ட பெரிய எருமைகளையும், பூரணப்பட்ட கருப்பத்தினால் வேதனையானது பொருந்தும் வண்ணங் கிடந்து மறிந்து வருந்திக் கதறா நிற்கும் பல மான் கூட்டங்களையும் பார்த்தார்கள்.

 

5005. உழையதட் பள்ளி யணைமிசை பயில

         வுவலையின் படற்கத வடைக்கு

     மழைபொரு கூந்தல் வாறயி ருடைத்த

         மத்தினா லுடைபடுந் திவலை

     யிழைபடு மார்பிற் செறிந்திடத் தரள

         வடங்கிடந் திலங்குவ போன்றுந்

     தழைபடு குரம்பை முலைநிலங் கடந்து

         போயினர் சலதரக் குடையார்.

94

      (இ-ள்) அவ்வாறு பார்த்த மேகக் குடையையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் படுக்கையறையின் கண்ணுள்ள மான்றோலினாற் செய்யப்பட்ட அணையின் மீது பயிலும் வண்ணந் தழைகளினாலான தட்டியாகிய கதவையடைக்கும் மேகத்தைப் போன்ற கூந்தலையுடைய