பக்கம் எண் :

சீறாப்புராணம்

1820


இரண்டாம் பாகம்
 

இடைச்சியர்கள் வெள்ளிய தயிரைக் கடைந்த மத்தினால் தகரா நிற்குந் துளிகள் ஆபரணங்கள் பொருந்திய மார்பினிடத்துச் செறிய, அவை முத்துவடங்கள் கிடந்து பிரகாசிப்பன போன்றும் ஓங்கா நிற்குஞ் சிறு குடில்களையுடைய முல்லை நிலங்களைத் தாண்டிச் சென்றார்கள்.

 

5006. ஊற்றுநீர் வறந்த சேற்றுநீர்க் கூவ

         லுடையிடத் துழையின மறுகி

     நாற்றிடு நாவா லசும்பினை நக்க

         நறுந்துளி யொன்றிலா தெழுந்து

     காற்றுருத் தெறியுங் கடுந்தழற் கானத்

         திடைவிடர் கான்றெழும் புகையைத்

     தோற்றுநீ ரெனப்பாய்ந் துலவியே திரியுஞ்

         சுரங்களுங் கடந்தனர் தோன்றல்.

95

      (இ-ள்) அன்றியும், அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஊற்றுச் சலமானது வற்றிய சேறாகிய நீரையுடைய பள்ளங்களாகிய தானத்தின்கண் மான் கூட்டங்கள் மறுக்கமுற்றுத் தொங்கா நிற்கும் நாவினால் அவ்வழுக்கு நிலங்களை நக்க, அங்கே நறிய நீர்த்திவலையானது ஒன்றுமின்றி யெழும்பிக் கோபித்துக் கொடுங்காற்றை வீசா நிற்குங் கொடிய வெப்பத்தைக் கொண்ட காட்டின் கண்ணுள்ள கமர்களாற் கக்கப் பெற்று ஓங்கா நிற்குந் தூமத்தைத் தோற்றிய சலமென்று கருதிப் பாய்ந்து உலாவித் திரிகின்ற பாலை நிலங்களையுங் கடந்தார்கள்.

 

5007. இரும்பினை வடித்த மோட்டுட லெருமை

         யிருங்கருங் குவளையங் கறித்துக்

     கரும்பிண ரெனக்கால் பெயர்த்துக்காய்த் திறைஞ்சுங்

         கதிருடைச் சாலியை யுழக்கி

     யருங்கரும் புடைந்து சாறெழக் கயவா

         யசைத்தசை போட்டுக்கண் டுயிலச்

     சுரும்பினங் கடைவாய் தவழ்ந்துபண் ணலம்பிச்

         சூழ்ந்திடுங் கழனியுங் கண்டார்.

96

      (இ-ள்) அவ்வாறு கடந்து இரும்பையே வசமாக்கிச் சமைத்ததைப் போன்ற பெரிய சரீரத்தையுடைய எருமைகள் தங்கள் வாயினாற் பெரிய நீலோற்பலமலர்களைக் கடித்துக் கரிய பிணர்களைப் போலும் பாதங்களைப் பூமியை விட்டும் பெயர்த்து, காய்த்துத் தலைவணங்கா நிற்கும் நெற்கதிர்களையுடைய விளை