|
இரண்டாம் பாகம்
நிலங்களைக் கலக்கி
அருமையான கரும்புகள் தகர்ந்து சாறெழும் வண்ணம் பெரிய வாயை அசைத்து அசைபோட்டு நித்திரை செய்ய,
வண்டுக் கூட்டங்கள் அவற்றின் கடை வாயினிடத்து நகர்ந்து கீதத்தைப் பாடிச் சூழா நிற்கும் மருத
நிலங்களையும் பார்த்தார்கள்.
5008.
இருள்படக்
கவிந்து கொண்டல்க டூங்கு
மிளமரச்
சோலையி னீங்காக்
கருவிள மலர்கட்
கலாபமே காரங்
களித்துநின்
றாடிட மாவின்
வருங்குயில் குடைந்து
தளிரினைக் கறித்து
மழலைவாய்
மிழற்றிட விசையிற்
றிருமக வகலா
தகடுற மந்திச்
சிரகம்பஞ்
செய்வதுங் கண்டார்.
97
(இ-ள்) அன்றியும்,
அந்தகாரமானது பொருந்தும் வண்ணங் கவிதலுற்ற மேகங்கள் தூங்கா நிற்கும் இளமை பொருந்திய மரங்களையுடைய
சோலையினிடத்து அகலாத கருவிளமலரைப் போன்ற கண்களைக் கொண்ட தோகையையுடைய மயில்கள்
களிப்புற்று நின்று நடிக்கவும், மாமரத்தின்கண் வரா நிற்குங் குயில்கள் வாயினால் தளிர்களைக்
குடைந்து கடித்து மழலை மொழியாகிய கீதத்தைப் பாடவும், குரங்குகள் தங்களது அழகிய குட்டிகள் வயிற்றின்கண்
நீங்காமல் பொருந்த வேகமாய்த் தலைகளையாட்டுவதையும் பார்த்தார்கள்.
5009.
வெண்ணிறப் பேழ்வாய்க்
கருமுகைச் சங்கம்
விளைந்தசூன்
முதிர்ந்துளைந் தலறிப்
பண்ணுறப் புலம்பு
மணியின முயிர்த்த
பங்கய வகழிநீ
ருடுத்துக்
கண்ணகன் ஞால
மொருங்கொரு புடையிற்
கவினுற
வமைத்துவா னவர்க
ளெண்ணுற நிவந்த
புரிசைசூழ் மதீனத்
தேகின
ரிடுமுகில் கவிப்ப.
98
(இ-ள்) அவ்வாறு
பார்த்துக் கொண்டு குடையிடா நிற்கும் மேகங்கள் நிழலைக் கவிக்கும் வண்ணம் வெள்ளிய நிறத்தையும்
பெரிய வாயையுமுடைய கருமுகைச் சங்கங்கள் தங்கள் வயிற்றின் கண்ணுண்டான கருப்பமானது முற்றி
வருந்திச் சத்தித்து இசையானது பொருந்தும் வண்ணம் புலம்பி முத்துக் கூட்டங்களைப் பெற்ற தாமரை
மலரையுடைய நீரைக் கொண்ட அகழியைத் தனக்கு ஆடையாக அணிந்து இடமகன்ற இப்பூமியை ஒருங்காக ஓர்
தானத்தில் அழகானது பொருந்தும்படி அமையப்பண்ணித் தேவர்களான மலாயிக்கத்துமார்கள்
|