பக்கம் எண் :

சீறாப்புராணம்

1823


இரண்டாம் பாகம்
 

உறனிக் கூட்டத்தார் படலம்

 

 எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

5012. மறைவிளை யாடி நாத்தழும் பேறு

         முகம்மதாண் டிருக்குமந் நாளிற்

     குறைபடு முறனிக் கூட்டத்தி லெண்மர்

         வந்தனர் குணமுட னேகி

     யறைகழ லரசர் பணிபதாம் புயத்தி

         லழுந்திடச் சிரசினை வைத்து

     நிறைவறக் கலிமா வினைப்பகர்ந் திருந்தார்

         நிறையழற் புகுதுநீர் மையினார்.

1

      (இ-ள்) புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனங்களில் விளையாடி நாவானது தழும்பேறா நிற்கும் நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் கௌனைன் ஷபீகுல் முதுனபீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்தத் திருறவுலாவிலிருக்கும் அக்காலத்தில், குற்றத்தைப் பொருந்திய உறனிக் கூட்டத்திலுள்ள நிறைந்த நரக லோகத்தின் கண் போய்ச் சேருந் தன்மையையுடையவர்களான காபிர்களெட்டுப் பெயர் வந்து பண்போடுஞ் சென்று ஒலிக்கின்ற வீரக்கழலைத் தரித்த வேந்தர்கள் வணங்கா நிற்கும் அவர்களது பாதமாகிய தாமரைமலரில் அழுந்தும் வண்ணந் தங்களது தலைகளை வைத்து வணங்கி, ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு என்னுந் திருக்கலிமாவை நிறைவற ஓதியிருந்தார்கள்.

 

5013. கடையளந் தறியார் பெருநக ரதனி

         லிருந்திடுங் காலையிற் சிறந்த

     வுடறடு மாறப் பருவர னோய்வந்

         தடைந்திட வுடைந்தனர் பெரிதாய்ப்

     படவர வுலகம் பொதுவறப் புரந்த

         பார்த்திவ ரெண்மரை நோக்கி

     மடைசெறி மறைநா லலம்புசெந் நாவான்

         மகிழ்வொடும் பார்த்தரு ளினரால்.

2

      (இ-ள்) தங்களது இறுதியை அளவிட்டு அறியாதவர்களான அந்தக் காபிர்கள் அவ்வாறு அந்தப் பெருமையையுடைய திரு